5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை தொடங்கியது; வாட்ஸ்அப், பேஸ்புக் இயங்காது

ஜம்மு-காஷ்மீரில் 2 ஜி வேகத்துடன் இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தளங்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டு உள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2020, 04:10 AM IST
5 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீரில் 2ஜி இணைய சேவை தொடங்கியது; வாட்ஸ்அப், பேஸ்புக் இயங்காது title=

ஸ்ரீநகர்: குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு நிர்வாகம் ஒரு பெரிய பரிசை வழங்கியதுடன், மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இணைய சேவைகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மாநிலம் முழுவதும் 20 மாவட்டங்களில் 2 ஜி மொபைல் இணைய சேவைகள் மீட்டமைக்கப்பட்டன. இருப்பினும், இணைய கட்டுப்பாடுகள் ஓரளவு இருக்கும் மற்றும் இணைய சேவைகளின் மூலம் 301 வலைத்தளங்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த முடியும். இது தவிர, சமூக ஊடக பயன்பாடுகளின் பயன்பாடுக்கான தடை நீக்கப்படவில்லை.

ஜம்மு-காஷ்மீரின் உள்துறை நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, தொலைபேசிகளில் 2 ஜி வேகத்துடன் இணைய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்த முடியாது. அங்கீகரிக்கப்பட்ட வலைத்தளங்களில் தேடுபொறிகள் மற்றும் வங்கி, கல்வி, செய்தி, பயணம், வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை அடங்கும். போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளில் தரவு வசதி கிடைக்கும். மொபைல் போன்களில் 2 ஜி இணைய வசதி ஜனவரி 31 வரை செயல்படும் என்றும், அதன் பின்னர் அது மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக இணைய சேவைகள் தடை:
பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் மற்றும் நிலைமை இயல்பானதாக இருப்பதைக் கண்டு, இணைய சேவைகளை மீண்டும் செயல்ப்படுத்த நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சேவைகள் கடந்த ஆகஸ்ட் 5 முதல் நிறுத்தி வைக்கப்பட்டன. அதன் பின்னர் மாநிலத்தில் பல அமைப்புகள் அரசாங்கத்தை எதிர்த்தன. வதந்திகள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக இணைய சேவைகள் தடை செய்யப்பட்டன குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளன:
இணையத் தடை காரணமாக பள்ளத்தாக்கில் பெரிய அளவிலான வணிக நடவடிக்கைகளும் சேதமடைந்தன. இதுபோன்ற சூழ்நிலையில், நிலைமையை மேம்படுத்துவதற்காக, இந்த நேரத்தில் 2 ஜி இணைய சேவைகளை தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணமாக, இந்த சேவைகளில் ஓரளவு கட்டுப்பாடுகள் உள்ளன. அதேசமயம், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற தளங்களின் பயன்பாடும் தடை செய்யப்பட்டு உள்ளது. நிர்வாக வட்டாரங்களின்படி, நிலைமைகள் இயல்பாக இருந்தால், வரும் நேரத்தில் பள்ளத்தாக்கில் அதிவேக இணைய சேவைகள் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News