ராமருக்கு உதவிய அணிலை போல் ராமர் கோவில் கட்ட அனைவரும் பங்களிக்கவும்: அக்‌ஷய் குமார்

அக்‌ஷய் குமார் தனது திரைப்படமான ‘ராம் சேது’ பற்றி அறிவித்த பின்னர் அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2021, 07:35 PM IST
  • அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நடிகர் அக்‌ஷய் குமார் தொடர்ந்து தனது ஆதரவைக் காட்டி வருகிறார்.
  • அனைவருமே பிரமாண்டமான ராமர் கோயிலின் கட்டுமானத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்
  • ராமர் பாலம் கட்ட ஒரு அணில் எவ்வாறு பங்கேற்றது என்ற கதையை அவர் கூறினார்.
ராமருக்கு உதவிய அணிலை போல் ராமர் கோவில் கட்ட அனைவரும் பங்களிக்கவும்: அக்‌ஷய் குமார் title=

அயோத்தியில் படமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் தனது 'ராம் சேது'  என்ற படம் குறித்து அறிவித்த நடிகர் அக்‌ஷய் குமார், அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானத்திற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்

உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் (Ayodhya) ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக நடிகர் அக்‌ஷய் குமார் தொடர்ந்து தனது ஆதரவைக் காட்டி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இது தொடர்பாக ஒரு சிறப்பு வீடியோவை நடிகர் வெளியிட்டார், அனைவருமே பிரமாண்டமான ராமர் கோயிலின் கட்டுமானத்திற்கு தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக நினைவில் நிற்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணமாக ஆக்க அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

நடிகர் அக்‌ஷய் குமார் தான் பதிவு செய்த ஒரு சிறிய வீடியோவை, ராமர் பாலம்  கட்ட ஒரு அணில் எவ்வாறு பங்கேற்றது என்ற கதையை முதலில் விளக்கி, அதைப் போல் கோவில் கட்டுமானத்தில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்றார்.

“அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் (Ram Temple) கட்டுமானம் அயோத்தியில் தொடங்கியுள்ளது. பிரம்மாண்டமான கோயில் கட்டுவதற்கு, உங்களால் முடிந்த அளவிற்கு  பங்களிக்கவும்  என உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் அதற்கு எனது பங்கை அளித்துள்ளேன். அதே போல் அனைவரும் கொடுக்கவும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக சில நாட்களுக்கு முன், அக்‌ஷய் குமார், மும்பையில் உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை (Yogi Adityanath) சந்தித்து அயோத்தியை மையமாகக் கொண்ட ராம் சேது என்ற தனது திரைப்படத்தைப் பற்றி ஆலோசனை செய்தார். உத்திர பிரதேசத்தில், 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பட வேலைகளை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. 

ALSO READ | விவசாயிகள் வருமானத்தை இரட்டிபாக்குவதே மோடி அரசின் முக்கிய குறிக்கோள்: அமித் ஷா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News