மக்களவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 25 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்!!
இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஆளும் கட்சி, எதிர் கட்சிகள் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பிரட்சாரம் செய்து வருகிறார். இந்திய அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வரும் 25 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு, ஆறாம் கட்டமாக மே மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையை இம்மாதம் 25ம் தேதி வெளியிட இருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையை, டெல்லி மாநில துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு தாயாரித்துள்ளது. டெல்லி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குது தொடர்பான வாக்குறுதிகள் அதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.