வைஷ்ணோ தேவி தரிசனத்துக்கு 2200km cycle பயணம் செய்யும் 68 வயது மராட்டிய பெண்மணி

இப்போது இவரைப் போன்ற வலிமையும், தைரியமும், நம்பிக்கையும் கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். நாம் அனைவரும் நம் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

Last Updated : Oct 20, 2020, 01:12 PM IST
  • மராத்தி பெண் ஒருவர் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு சைக்கிளில் பயணம் செய்கிறார்.
  • இது குறித்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
  • நாம் அனைவரும் நம் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.
வைஷ்ணோ தேவி தரிசனத்துக்கு 2200km cycle பயணம் செய்யும் 68 வயது மராட்டிய பெண்மணி title=

மும்பை: மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயது பெண் ஒருவர் வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் சென்று அம்மனை தரிசிக்க தன் சைக்கிளில் கிளம்பியுள்ளார். ஆம்!! ஆச்சரியமாக இருக்கும் இந்த விஷயம் முற்றிலும் உண்மையான ஒரு விஷயமாகும்.

இது குறித்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் மராத்தி பெண் ஒருவர் வைஷ்ணோ தேவி (Vaishno Devi) கோயிலுக்கு சைக்கிளில் பயணம் செய்கிறார் என்று கூறப்படுகிறது. வீடியோ வெளிவந்த பிறகு, மக்கள் சமூக ஊடகங்களில் அந்தப் பெண்மணியை வெகுவாக பராட்டி வருகிறார்கள்.

ALSO READ: Watch Video: 5 mins-ல் 1.6 km அசால்டாய் ஓடி அசத்திய அமெரிக்காவின் 9 மாத கர்ப்பிணிப் பெண்!!

ரத்தன் ஷார்தா என்ற ட்விட்டர் பயனர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் (Social Media) பகிர்ந்து கொண்டார். "68 வயதான மராத்தி பெண் ஒருவர் சைக்கிளில் வைஷ்ணோ தேவி கோயிலுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் காம்கானில் இருந்து 2200 கி.மீ தூர பயணமாகும் ….. தாயின் சக்தி" என்று அவர் எழுதியுள்ளார்.

வீடியோ வெளிவந்த பிறகு, மக்கள் அந்தப் பெண்ணை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். சிலர் அவருக்கு உதவுவது பற்றியும் பேசுகிறார்கள். ஒரு பயனர், “மராட்டியர்கள் தங்களது திடத்தால் முகலாயர்களை வேர் வரைத் தாக்கினார்கள். மராட்டிய உறுதிக்கு இவர் ஒரு சாட்சி” என்று எழுதினார்.

மற்றொரு பயனர், "அந்தப் பெண்ணுக்கு ஒரு லிப்ட் கொடுத்து அவரது பயணத்தில் உதவுங்கள். ஜெய் மாதா தி" என்று எழுதியுள்ளார்.

"இது நம்பமுடியாத ஒரு பிரமிக்க வைக்கும் விஷயமாக உள்ளது! அவர் தனது பயணத்தை பாதுகாப்பாக முடிக்க வேண்டும் என நாம் விரும்புகிறேன். இப்போது இவரைப் போன்ற வலிமையும், தைரியமும், நம்பிக்கையும் கொண்டவர்களைப் பார்ப்பது கடினம். நாம் அனைவரும் நம் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. ஜெய் மாதா தி" என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார்."

அப்பெண்மணி தனது பயணத்தை நன்றாக பூர்த்தி செய்து வைஷ்ணோ தேவியின் தரிசனத்தைப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.

ALSO READ: இனி mask-க கழட்ட வேண்டாம், அப்படியே சாப்பிடலாம்: வந்திடுச்சு Zip போட்ட Mask!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News