ஒரே நாளில் மிக அதிகமாக 66,999 பேர் பாதிப்பு! இந்தியாவில் தொடரும் கொரோனா களியாட்டம்!!

வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஒரே நாளில் நாட்டில், கொரோனா வைரஸ் கோவிட் -19 தால் 66,999 பேர் பிதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 13, 2020, 01:18 PM IST
  • கொரோனா தொற்று உலகிலும் இந்தியாவிலும் குறைவதாகத் தெரியவில்லை.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,96,638 ஆக உயர்ந்துள்ளது.
  • தொடர்ந்து 15 நாட்களாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்டோர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஒரே நாளில் மிக அதிகமாக 66,999 பேர் பாதிப்பு! இந்தியாவில் தொடரும் கொரோனா களியாட்டம்!! title=

புதுடெல்லி: கொரோனா தொற்று (Corona Virus) உலகிலும் இந்தியாவிலும் குறைவதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் இதன் வீரயமும் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. வியாழனன்று வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஒரே நாளில் நாட்டில், கொரோனா வைரஸ் COVID-19 தால் 66,999 பேர் பிதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 942 பேர் இறந்தனர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் (Union Ministry of Health) தரவுகளின்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23,96,638 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,53,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். 16,95,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 47,033 பேர் இறந்துள்ளனர்.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி ஒரே நாளில் 8,30,391 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 2,68,45,688 என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.

நாட்டில் இறப்பு விகிதம் 1.96 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 6,53,622 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது அதன் மொத்த தொற்று எண்ணிக்கையில் 27.27 சதவீதமாகும்.

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,95,982 ஆகும். இதன் மூலம் மீட்பு விகிதம் 70.76% ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ: இந்தியாவில் முதலில் COVID தடுப்பூசி யாருக்கு கிடைக்கும்? நிபுணர் குழு ஆலோசனை

மகாராஷ்டிராவில் சிகிச்சியயில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,47,820 ஆக உள்ளது. இது நாட்டிலேயே மிக அதிக அளவாகும். அடுத்தபடியாக ஆந்திராவில் 90,425 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டு சிகிச்சியில் உள்ள அதிக மக்கள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. தொடர்ந்து 15 நாட்களாக இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்டோர் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன்ன. 

ALSO READ: ரஷ்யா உண்மையில் கொரோனா தடுப்பூசியை தயாரித்ததா?.. உண்மை என்ன?

Trending News