குழந்தை ஆபாச வீடியோ வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை; ஜாமீன் இல்லை....

சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.

Last Updated : Nov 24, 2018, 03:45 PM IST
குழந்தை ஆபாச வீடியோ வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை; ஜாமீன் இல்லை.... title=

சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.

தற்போது நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், சிறுவர்கள் ஆபாசப் படங்கள் வைத்திருப்பதை தடுக்க குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. 

தற்போதுள்ள போக்சோ சட்டத்தின் 15 ஆவது பிரிவின்படி, இந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். திருத்தம் செய்யப்பட்ட பிறகு 3 ஆண்டுகளுக்கு குறையாமலும் 5 ஆண்டுகள் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும். 

பிணையில் வெளிவர முடியாத குற்றமாகக் கருதப்படும் இதே தவறை இரண்டாவது முறையாக செய்தால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் வாட்ஸ்ஆப்பில் சிறார்களை ஆபாசமாக சித்தரிக்கும் கன்டன்ட்டுகள் வந்தால் அதை அழித்துவிடவோ புகார் அளிக்கவோ தவறினால் அபராதம் விதிக்கப்படும். 

போக்சோ சட்டத்தின் 15 ஆவது பிரிவில் செய்யப்பட உள்ள இந்த திருத்தங்கள் சட்ட அமைச்சகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அடுத்த வாரத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குழந்தைகள், சிறுவர்கள் ஆபாச படங்கள் வைத்திருப்பது பற்றித் தெரிந்து அதுகுறித்து பெற்றோர்கள் புகார் அளிக்காமலோ அதனை அழிக்காமலோ இருந்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இதே குற்றத்தைச் செய்பவருக்கு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

 

Trending News