42 பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!!

சட்லஜ் யமுனை இணைப்பு கால்வாய் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டித்து பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 42 எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.

Last Updated : Nov 11, 2016, 02:09 PM IST
42 பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!! title=

சண்டிகர்: சட்லஜ் யமுனை இணைப்பு கால்வாய் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை கண்டித்து பஞ்சாப் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 42 எம்.எல்.ஏ.,க்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.

சட்லஜ்-யமுனை இணைப்பு கால்வாய் விவகாரம் காரணமாக அரியானாவிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தர பஞ்சாப் மறுத்து வந்தது. இதனை தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த விசாரணையை குறித்து சுப்ரீம் கோர்ட், சட்லஜ்-யமுனை இணைப்பு கால்வாய் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக பஞ்சாப் மீது கண்டனத்திற்குஉரியது. அண்டை மாநிலத்திற்கு தர வேண்டிய தண்ணீரை வழங்க பஞ்சாப் மறுப்பது ஏற்புடையதல்ல என கண்டனம் தெரிவித்தது. அரியானாவிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கவும் என்று சுப்ரீம் கோர்ட் பஞ்சாப்பிற்கு உத்தரவிடப்பட்டது. 

பஞ்சாப்பில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக அரியானாவில் இருந்து பஞ்சாப் செல்லும் வாகனங்களும், பஞ்சாப்பில் இருந்து அரியானா செல்லும் வாகனங்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. 

Trending News