ஜம்முவில் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை முஜ்குண்டு பகுதியில் நடந்த என்கவுண்டரில் பாதுகாப்புபடையினரால் சுட்டுகொள்ளபட்டனர்; இதில் ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளனர்!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகேயுள்ள முஜ்குந்த் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக ராணுவத்தினருக்கு நேற்று (டிசம்பர் 8) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்த தகவலின் பேரில் பாதுகாப்புபடையினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த தகவலை அறிந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் பாதுகப்புபடையினரை துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். இதை தொடர்ந்து பாதுகாப்புபடையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 17 மணி நேரம் நீடித்த இந்த மோதலில் பாதுகாப்புபடையினர் மூன்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுகொன்றுள்ளனர்.
#JammuAndKashmir: Three terrorists have been neutralied in Mujgund encounter in Srinagar. 5 security personnel have been injured. Weapons and other warlike stores have been recovered. Search operation is underway. (visuals deferred by unspecified time). pic.twitter.com/m3qC862ZGv
— ANI (@ANI) December 9, 2018
மேலும், இந்த தாக்குதலில் 5 பாதுகாப்புபடையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, காயமடைந்த பாதுகாப்பு வீரர்கள் சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து, மேலும் தீவிரவாதிகள் உள்ளனரா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.