தொலை தொடர்புத்துறை ஊழலின் அடையாளம் 2ஜி - பிரதமர் மோடி

அடுத்த 10 ஆண்டுகளில் 6ஜி தொழில்நுட்பத்தை கொண்டுவர இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : May 17, 2022, 06:08 PM IST
  • 25 ஆண்டுகளை நிறைவு செய்த தொலைத்தொடர்புத்துறை ஒங்குமுறை ஆணையமான ட்ராய்
  • வெள்ளி விழா கொண்டாட்டத்த்தில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி
  • அடுத்த 10 ஆண்டுகளில் 6ஜி தொழில்நுட்பம் கொண்டுவர இந்தியா இலக்கு
தொலை தொடர்புத்துறை ஊழலின் அடையாளம் 2ஜி - பிரதமர் மோடி title=

இந்திய தொலைத்தொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் 25வது வெள்ளிவிழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி 5ஜி அலைக்கற்றை சோதனையை தொடங்கி வைத்தார். 

பின்னர் பேசிய பிரதமர் மோடி, ''21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை தொலைத்தொடர்புத்துறை தீர்மானிக்கும். அடுத்த 15 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5ஜி தொழில்நுட்பம் 450 பில்லியன் டாலர்களாக உயர்த்தும். 

5ஜி என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்யும் விஷயம். இது இணையத்தின் வேகத்தை மட்டும் அதிகரிக்காமல், நாட்டின் வளர்ச்சியையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிகச் செய்கிறது. கிராமங்களுக்கு இணையத்தை கொண்டு சேர்க்கும் பணியில் 5ஜி முக்கிய பங்கு வகிக்கும்.  இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை நாட்டுக்கு அர்பணிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. தொலைத்தொடர்பு துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான முக்கியமான படி இதுவகும். 

மேலும் படிக்க | இளைஞர்களுக்கு துப்பாக்கி பயிற்சி : இந்து அமைப்புகளின் செயலால் சர்ச்சை

விவசாயம், கல்வி, சுகாதாரம், வணிகம், உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள் என அனைத்து துறைகளிலும் 5ஜி சாதகமான மாற்றங்களை கொண்டுவரப் போகிறது. 2ஜி சகாப்தம் கொள்கை முடக்கம் மற்றும் ஊழலின் அடையாளமாக திகழ்ந்தது. அதிலிருந்து மீண்டு, தற்போது 3ஜி, 4ஜி, 5ஜி, 6ஜி என இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக செல்போன்கள் உற்பத்தி தொழிற்சாலை 2-ல் இருந்து 200-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில் உலகின் மிகப்பெரிய செல்போன் உற்பத்தி மையமாக இந்தியா உள்ளது. ஆரோக்கியமான போட்டி ஊக்குவிக்கப்படுவதால் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை டேட்டா கட்டணங்கள் மலிவாக உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

மேலும் படிக்க | உடனடியாக ரேஷன் கார்டில் இந்த அப்டேட் செய்யுங்கள், இல்லையெனில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News