புதுடெல்லி: மும்பையில் நடந்த 26/11 தாக்குதலின் சூத்திரதாரி மற்றும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-ஈ-தாய்பா-வின் தளபதி ஜாகிர்-உர்-ரெஹ்மான் லக்வி பயங்கரவாத நிதி குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானிலிருந்து வரும் அந்த தகவல்களின்படி, பயங்கரவாத நிதி குற்றச்சாட்டில் ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டுள்ளார்.
26/11 Mumbai attack mastermind Zakiur Rehman Lakhvi arrested in Pakistan for terror financing, reports ARY News
— ANI (@ANI) January 2, 2021
2008 ஆம் ஆண்டில், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலின் (Mumbai Terror Attack) சூத்திரதாரியாக செயல்பட்ட லக்வி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
மும்பை (Mumbai) பயங்கரவாத தாக்குதல் இந்தியாவில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். ஏனெனில் பாகிஸ்தானில் இருந்து 10 ஆயுதமேந்திய லஷ்கர்-இ-தைபா தீவிரவாதிகள் மும்பைக்குள் திருட்டுத்தனமாக முழைந்து 166 பேரைக் கொன்றனர். 300 பேர் காயமடைந்தனர்.
ALSO READ: Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!
ரெஹ்மான் லக்வி பயங்கரவாத எதிர்ப்புத் துறையால் (CTD) கைது செய்யப்பட்டார் என்று அறிக்கையை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி கூறியது. இருப்பினும், அவர் கைது செய்யப்பட்ட இடத்தை சி.டி.டி குறிப்பிடவில்லை என்று தெரிகிறது.
சி.டி.டி பஞ்சாப் படைக்கு கிடைத்த ஒரு உளவுத்துறை செய்தியின் அடிப்படையில் சி.டி.சி பஞ்சாப் எடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தாய்பாவின் தலைவர் ஜாக்கி-உர்-ரஹ்மான் லக்வி இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டான் என்று சி.டி.டி கூறியது.
நமது அண்டை நாடான பாகிஸ்தான் (Pakistan) இன்னும் பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சாம்பல் பட்டியலில் உள்ளது என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானது. 2018 ஆம் ஆண்டில், இந்த அமைப்பில் பாகிஸ்தான் இடம்பிடித்தது. தன் செயலை திருத்திக்கொள்ள பாகிஸ்தானுக்கு ஒரு செயல் திட்டமும் வழங்கப்பட்டது.
நவம்பர் 26, 2008 அன்று நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல்கள் நமது நாட்டின் உறுதியை உலுக்கிப்பார்த்தது. அந்த சம்பவம் நம் நினைவில் ஒரு வடுவாக மாறி விட்டது. கடல் மார்க்கமாக வந்த 10 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) ரயில் நிலையம், நரிமன் ஹவுஸ் வளாகம், லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல் மற்றும் டவர், ஓபராய்-ட்ரைடென்ட் ஹோட்டல் மற்றும் காமா மருத்துவமனை ஆகியவற்றையும் தெற்கு மும்பையில் உள்ள மற்ற சில முக்கிய இடங்களையும் குறிவைத்தனர்.
மூன்று நாட்களுக்குத் தொடர்ந்த இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் (Terrorists) இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நீண்ட நேரம் தொடர்ந்த போராட்டத்தில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு ஒரு பயங்கரவாதி உயிரோடு பிடிபட்டான்.
ALSO READ: இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் அணுநிலையங்கள் பட்டியலை பரிமாறிக் கொண்டன
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR