2024 ஆம் ஆண்டு பெரிய சவாலாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் -காங். தலைவர் கார்கே

Congress Party's 85th Plenary Session: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85 வது மாநாடு தொடங்கியது. அடுத்த ஆண்டு 2024 நமக்கு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 24, 2023, 02:57 PM IST
  • ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85 வது மாநாடு தொடங்கியது.
  • 2024 ஆம் ஆண்டு ஒரு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் இருக்கும் -கார்கே.
  • காங்கிரஸ் மாநாட்டில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டு பெரிய சவாலாகவும், நல்ல வாய்ப்பாகவும் இருக்கும் -காங். தலைவர் கார்கே title=

Congress Plenary Session: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85 வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. இந்த காங்கிரஸ் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும். இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும் போது, "2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸின் மாநாடு கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது ஒரு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் உள்ளது என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே பேசியது, 

"ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு அச்சுறுத்தல் மற்றும் பாராளுமன்ற அமைப்புகள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் மாநாடு நடத்தப்படுகிறது என்று கூறினார். கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க வேண்டும் மற்றும் கட்சியின் செயற்குழுவில் முக்கியமான முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவராக நான் உங்களை சுதந்திரமாக செயல்படவும் கூட்டாக முடிவெடுக்கவும் உங்களை வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது எனது மற்றும் அனைவரின் முடிவாக இருக்கும்" என்றார்.

மேலும் படிக்க: ஈரோடு காங்கிரஸ் வெற்றி டெல்லிக்கு கேட்கனும்: ப.சிதம்பரம்

2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸின் முழுக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இது ஒரு பெரிய சவாலாகவும், ஒரு வாய்ப்பாகவும் உள்ளது என்று கார்கே கூறினார்.

1885 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் 84 வது மாநாடு நடைபெற்றுள்ளதாகவும், மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்த மாநாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றும் அவர் கூறினார்.

இதுவரை நடந்த பல்வேறு மாநாட்டில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சில முடிவுகள் மைல்கற்களாக உள்ளன என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க: பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பிறகு ராகுல் காந்தியைக் கண்டு மத்திய அரசு பயமா?

மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜியாராம் ரமேஷ் பேசுகையில், 

அனைத்து காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களையும் நியமனம் செய்ய கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அங்கீகாரம் வழங்க காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு ஒருமனதாக முடிவு செய்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜியாராம் ரமேஷ் தெரிவித்தார்.

மேலும் அவர், "ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் போது கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்து சென்று வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் பிற பொருளாதார பிரச்சனைகளை எழுப்பி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அந்த விழிப்புணர்வை நாம் தொடர்ந்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

மேலும் படிக்க: மக்களவை தேர்தல் இன்று நடந்தால்... ஆட்சியை கைப்பற்றுமா பாஜக - குட் நியூஸ் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News