கர்நாடகாவில் உள்ள புலிகேசி நகர் தொகுதி எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவின் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த மக்கள் எம்.எல்.ஏ அகண்ட மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. எம்.எல்.ஏவின் உறவினரான நவீனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எம்.எல்.ஏவின் வீடு மீது கற்களை வீசி வாகனங்களும் தீ வைக்கப்பட்டன.
ALSO READ | Bengaluru Sunday curfew: அத்தியாவசிய சேவைகள், வீட்டு விநியோகத்திற்காக உணவகங்கள் திறப்பு
இது தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் வன்முறையைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பின்னர் போலீசார் தடியடியும் நடத்தி கூட்டத்தை கலைத்தனர். எனினும், வன்முறை கட்டுக்குள் வராததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.
முன்னதாக, "டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலையப் பகுதிகளில் சமூக ஊடக இடுகையைத் தூண்டியதாகக் கூறப்படும் மோதல்களில் ஏற்பட்ட கூடுதல் மோதலில் கூடுதல் போலீஸ் கமிஷனர் உட்பட சுமார் 60 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக,"பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல் பந்த் ANI இடம் தெரிவித்தார்.
With regard to incidents in DJ Halli, accused Naveen arrested for posting derogatory posts.. also total 110 accused arrested for arson, stone pelting and assault on police. APPEAL TO ALL TO COOPERATE WITH POLICE TO MAINTAIN PEACE.
— Kamal Pant, IPS (@CPBlr) August 11, 2020
இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவு வெளியிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ உறவினர் நவீன் கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகர கமிஷனர் தெரிவித்தார்.
ALSO READ | கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார் கர்நாடக முதல்வர் B S Yediyurappa...!!!
வன்முறையை தொடர்ந்து பெங்களூருவின் டிஜே ஹல்லி மற்றும் கேஜி ஹல்லி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக 110-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
DJ Halli Police Station in Bengaluru vandalised last night, as violence broke out in the city over an alleged inciting social media post.
Sec 144 CrPC imposed in Bangaluru city,curfew in DJ Halli & KG Halli police station limits. 2 died, 110 arrested, 60 Police personnel injured pic.twitter.com/CO1ZdIzLbx
— ANI (@ANI) August 12, 2020
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது., குற்றவாளிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் நிலைமையைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன. ஊடகவியலாளர்கள், காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற ஆத்திரமூட்டல்களையும் வதந்திகளையும் அரசு பொறுத்துக்கொள்ளாது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுக்கபடும் என்றார்.