மராட்டியம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. சாவித்ரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உயர் அழுத்தத்துடன் தண்ணீர் சென்றதன் காரணமாக பாலம் இடிந்து விழுந்தது என்று முதல்கட்ட தகவலில் தெரியவந்து உள்ளது. பாலம் இடிந்து விழுந்த பகுதியில் சென்றுக் கொண்டிருந்த மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 2 பஸ்கள் 22 பயணிகளுடன் அடித்து செல்லப்பட்டது.
இதுதொடர்பான தகவல் வெளியாகியதும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் பஸ்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இதற்கிடையே தேசிய பேரிடர் மேலாண்மை படையினரும் அங்கு சென்று, தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கனமழை, ஆற்றில் தண்ணீர் அதிகரித்து செல்வது மீட்பு பணிக்கு சவாலாகிஉள்ளது. நெடுஞ்சாலையில் இரண்டு தனித்தனி பாலங்கள் உள்ளது. ஒன்று பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது, மற்றொரு இப்போது கட்டப்பட்டது. பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து புதிய பாலம் வழியாக வாகனங்கள் அனுப்பட்டு சீர் செய்யப்பட்டு உள்ளது.
மாநில முதல்-மந்திரி தேவேந்திர பாட்னாவிஸ் பேசுகையில்:- மும்பை-கோவா நெடுஞ்சாலையில் பாலம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பயணித்த 2 அரசு பஸ்கள் அடித்து செல்லப்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரியவந்து உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்பு பணியில் தீவிரமாக இறங்கிஉள்ளனர். அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
Pictures from the spot of bridge collapse on Mumbai-Goa highway in Raigad (Maharashtra) pic.twitter.com/wSM49SYkbn
— ANI (@ANI_news) August 3, 2016
இன்று காலையில் பிரதமர் மோடி என்னிடம் பேசினார், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று கூறினார். அனைத்து மீட்பு குழுவினரும் ஒங்கிணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் அவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர், என்று கூறிஉள்ளார்.
Pictures of the bridge that collapsed on Mumbai-Goa highway in late night hours. Rescue operations underway pic.twitter.com/Q2Y1kebJAj
— ANI (@ANI_news) August 3, 2016