நோயாளிகளுக்கு ரூ.1000 ஓய்வூதியம் - தெலுங்கானா அரசு அதிரடி!

நிணநீர் வடிகால் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது!

Last Updated : Feb 9, 2018, 09:06 PM IST
நோயாளிகளுக்கு ரூ.1000 ஓய்வூதியம் - தெலுங்கானா அரசு அதிரடி! title=

நிணநீர் வடிகால் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதம் ஒன்றுக்கு 1,000 ரூபாய் சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்க முடிவு செய்துள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது!

நிணநீர் வடிகால் நோய் என்பது நுண்ணுயிரிகள், நூல் போன்ற புழுக்களால் ஏற்படும் ஒட்டுண்ணி நோய் ஆகும்.

இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ஓய்வூதியம் வழங்குவதற்கான வரவு-செலவினை அடுத்து நிதியாண்டில், நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் நிணநீர் வடிகால் பாதிக்கப்பட்ட 47,000 நோயாளிகள் பயன்பெருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில சாலை மற்றும் கட்டடங்களுக்கான அமைச்சர் டி. நாகேஸ்வர ராவ் மற்றும் டி.ஆர்.எஸ். கட்சியின் எம்.பி, எம். கே. கவிகா,  ஆகியோரின் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பிட்ட அலகு காலத்தில் இதற்கான பரிசோதனையும் தொடர்சியாக நடத்தப்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News