நீச்சல் குளத்தில் மூழ்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!!

ஐதராபாத்தில் 15 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த காட்சிகள் வெளியாகியுள்ளன!!

Last Updated : Feb 25, 2019, 12:16 PM IST
நீச்சல் குளத்தில் மூழ்கி 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!! title=

ஐதராபாத்தில் 15 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த காட்சிகள் வெளியாகியுள்ளன!!

ஐதராபாத்தில் முகமது காஜா பாஷா எனும் 15 வயது சிறுவன் தமது 4 நண்பர்களுடன் ஏ டூ இஸட் எனும் நீச்சல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தான். கடந்த வெள்ளிக் கிழமை மாலை சுமார் ஆறரை மணியளவில் பிற நண்பர்கள் பயிற்சி முடித்து சென்ற நிலையில், பயிற்சியாளர் அற்ற நீச்சல் குளத்தில் தனியே பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். திடீரென ஆழத்தில் பாய்ந்து நீச்சலடிக்க முயன்ற காஜா பாஷா நீரில் தத்தளித்து துடிதுடித்தார்.

மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட காஜா பாஷா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நீச்சல் குளத்தில் காஜா பாதுகாப்புக்காக மிதவைகள் எதையும் இடுப்பைச் சுற்றியோ, கையிலோ பயன்படுத்தவில்லை என்பதால் உயிரிழந்த போதும், சிறுவனை கவனிக்காமல் அலட்சியத்தால் மரணம் விளைவித்ததாக நீச்சல் பயிற்சி பள்ளி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

Trending News