கார்கில் யுத்தத்தின் போது இராணுவத்திற்கு உதவிய லடாக் இளைஞர்கள்!!!

லடாக் இளைஞர்கள் தேச பற்று மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர்கள் நமது தாய் மண்ணை காக்க இந்திய இராணுவத்திற்கு உதவ எப்போதுமே தயாராக இருந்திருக்கிறார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 24, 2020, 02:13 PM IST
  • 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்தில், லடாக் மக்கள், இராணுவ வீரர்களுக்கு உதவி தங்களது தேச பற்றை நிரூபித்துள்ளனர்.
  • லடாக் இளைஞர்களுக்கு எப்போது தேசமே தெய்வம் என்றால் மிகையில்லை.
  • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள தற்போதைய பதற்றமான சூழ்நிலையிலும், இராணுவத்திற்கு உதவ தயாராகவே உள்ளனர்.
கார்கில் யுத்தத்தின் போது இராணுவத்திற்கு உதவிய லடாக் இளைஞர்கள்!!! title=

லடாக் இளைஞர்கள் தேச பற்று மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம். அவர்கள் நமது தாய் மண்ணை காக்க இந்திய இராணுவத்திற்கு உதவ எப்போதுமே தயாராக இருந்திருக்கிறார்கள்.

லடாக்: இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் ஏற்பட்ட பதற்றம் நிலவி வவரும் நிலையில், லடாக் (Ladakh)  வீரர்கள் தொடர்பான பழைய சம்பவங்கள் வெளிவந்துள்ளன.  ZEE NEWS லடாக் சென்ற போது, இது தொடர்பான சம்பவங்களை அறிந்தனர். 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் யுத்தத்தில், லடாக் மக்கள், இராணுவ வீரர்களுக்கு உதவி தங்களது தேச பற்றை நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு எப்போது தேசமே தெய்வம்.  இவர்கள், நமது இராணுவத்தின் மீது பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். அதனால், கார்கில் யுத்தத்தின் போது, இவர்கள் இராணுவத்திற்கு பின்னால் ஒரு அரண் போல் நின்றனர்.

Also Read | தனது சீனப் பிரதிநிதியை ராஜ்நாத் சிங் சந்திப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை...

லாடாக்கை சேர்ந்த மொஹம்மத் அக்தர், 1999 ஆம் ஆண்டில் கார்கில் யுத்தத்தின் (Kargil war)  போது, இராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான பொருட்களை, இந்த மலை பிரதேசத்தில், கடினமான பாதையில், சுமார் 20 கிலோமீட்டர் நடந்து சென்று,  அவர்களிடம் கொண்டு சேர்த்தார்.

அதே போன்று ரிக்ஜின் நாக்பால் என்பவர், ட்ரக் ஓட்டுபவர் ஆவார். அவர், லேயில் இருந்து, கார்கில் பகுதிக்கு, ரேஷன் பொருட்களுடன், இராணுவத்திற்கு ( Army)  தேவையான சாமான்களை கொண்டு சென்று சேர்த்தார். ரிக்ஜின் நாக்பாலுக்கு முதலில், போர்களத்திற்கு செல்வதற்கு அச்சமாக இருந்தது. ஆனால், ட்ரக்கில் சாமான்களை கொண்டு கார்கில் சென்ற போது, அங்குள்ள படை வீரர்களின் வீரத்தை கண்டு, பாகிஸ்தானை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம்  அவருக்கு ஏற்பட்டது.

Also Read | பதாஞ்சலியின் COVID-19 தடுப்பு மருந்தை பயன்படுத்த புதிய சிக்கல்...

இதே போன்று 64 வயதான ஆங்சுக் என்பவர், தேசத்தை காக்க, இராணுவத்திற்கு உதவும் வகையில், இராணுவத்திற்கு தேவையான துப்பாக்கி குண்டுகள் மற்றும் அரசி, பருப்பு, சர்க்கரை போன்றவற்றை தனது தோளில் சுமந்து கொண்டு சென்று, அவர்களிடம் சேர்த்தார்.

இராணுவத்திற்கு உதவ பெண்களும் தங்கள் பங்கிற்கு உதவியுள்ளனர்.  லின்சேன் லோமோ என்ற பெண், கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுடன் சேர்ந்து, இராணுவத்தினருக்கு தேவையான உணவை தயாரித்து அனுப்பினர்.

இப்போது இந்தியாவிற்கும் (India). சீனாவிற்கும் இடையில் பதற்றம் உள்ள நிலையில், அங்கிருக்கும் இளைஞர்கள் கூறுவது என்னவென்றால், தேவைப்பட்டால், கார்கில் யுத்தத்தின் போது இராணுவ வீரர்களுக்கு  உதவியதைப் போல், தற்போதும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதாவது லடாக்கின் ஒவ்வொரு இளைஞரும் சீனாவை (China) பழிவாங்க எல்லைக்கு செல்ல தயாராக உள்ளனர். சீனாவிற்கு பாடம் கற்பிக்க LAC பகுதிக்கு செல்ல தயாராகவே உள்ளனர்.

இன்று, லாடாக் இளைஞர்களின் குரலை கேட்டு, சீனாவிற்கு நிச்சயம் பயம் ஏற்படும். ஏனென்றால், நமது தலைசிறந்த, வலிமையான இராணுவ வீரர்களுடன், தேச பற்று மிக்க இளைஞர்களும் சீனாவை பழி வாங்க தயாராக உள்ளனர்.

மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்

Trending News