புதுக்கோட்டையில் பெரியார் சிலையை உடைத்ததாக கைது செய்யப்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர் செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்து சி.ஆர்.பி.எப் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் சி.ஆர்.பி.எப். வீரர் செந்தில்குமாரின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் கடந்த 2003-ம் ஆண்டு பெரியார் சிலை ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
இதனிடையே பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், சிசிடிவி கேமரா காட்சியை வைத்து ஆராய்ந்த காவல்துறையினர், சிலையை சேதப்படுத்திய செந்தில்குமார் என்ற ஆயுதப்படை வீரரை கைது செய்தனர்.
விசாரணையில், 1998ஆம் ஆண்டு முதல் சத்தீஸ்கர் மாநிலத்தில் சி ஆர் பி எப் வீரராக இருக்கும் அவர், குடி போதையில் இந்த செயலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்
முன்னதாக, திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்திலும் ஒரு நாள் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று எச் ராஜா தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தந்தை பெரியார் சிலையை உடைத்ததாக பிடிபட்ட பாஜக பிரமுகர் முத்துராமனை பொதுமக்கள் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
பின்னர், எச் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதை தொடர்ந்து, எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் எச் ராஜா பெரியார் சிலை உடைப்பு குறித்து தான் கருத்து கூறவில்லை என்றும் அது தன் அனுமதியின்றி தனது அட்மின் பதிவு செய்தார் என்று தெரிவித்த ராஜா, அதற்காக வருத்தம் தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை இந்துத்துவா அமைப்பினர் உடைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. கேரளா மாநிலம் கண்ணூரில் மர்ம நபர்களால் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பரபரப்பாக உள்ள இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தில் உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
CRPF personnel who was arrested for vandalizing Periyar's statue in Tamil Nadu's Pudukottai, has been placed under suspension. CRPF says he is under treatment for Schizophrenia & was on a 30-day leave when the incident happened. pic.twitter.com/kGZbSlqFFO
— ANI (@ANI) March 21, 2018