ஐ.பி.எல் போட்டியை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
தற்போது, ஏர்டெல் நிறுவனம் ரூ.249 என்ற புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியது. இதை தொடர்ந்து பல்வேறு டெலிகாம் நிறுவனங்கள் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தியது. இந்நிலையில், ஐடியா நிறுவனமும் ரூ.349/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டம் மொத்தம் 28 நாட்கள் வால்டிட்டியை கொண்ட இந்த திட்டமானது நாள் ஒன்றுக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை தருகிறது. இந்த ஐடியா ரூ.349/- ஆனது நிறுவனத்தின் ரூ.357/- ப்ரீபெயிட் திட்டத்துடன் முற்றிலும் மாறுபடுகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் ஐடியா-ன் பெரும்பாலான வட்டங்களில் ரீ-சார்ஜ் செய்ய கிடைத்தாலும் கூட, ரூ.357/- திட்டத்தை விட ரூ.349/- ஆனது சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
நாள் ஒன்றிற்கு 3-ஜிபி அளவிலான டேட்டா என செல்லுபடியாகும் மொத்த 84 ஜி.பி அளவிலான டேட்டாவை கொடுக்கிறது. உடன் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் நாள் ஒன்றிற்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவைகளையும் வழங்குகிறது.
இத்திட்டத்தில் குரல் அழைப்பு வரம்புகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 250-க்கும் மேற்பட்ட வெளிச்செல்லும் நிமிடங்களை (local+std call) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நொடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் தொடர்ச்சியான முறையில் ஏழு நாட்களுக்கு ஏறக்குறைய 1000 நிமிடங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, அடுத்த ஏழு நாட்களுக்கு ஒரு வினாடிக்கு ஒரு பைசா என்கிற விகிதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும்.