100GB இலவச கூடுதல் 4G டேட்டா-வுடன் வருகிறது Honor 7C!

Huawei நிறுவனத்தின் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வரவான Honor 7C தற்போது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது!

Last Updated : Jun 1, 2018, 11:21 AM IST
100GB இலவச கூடுதல் 4G டேட்டா-வுடன் வருகிறது Honor 7C! title=

Huawei நிறுவனத்தின் மலிவு விலை போனான Honor மொபெல் தனது அடுத்த வரவான Honor 7C தற்போது அமேசானில் விற்பனைக்கு வந்துள்ளது!

பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த Honor 7C ஆனது தற்போது பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் அறிமுக சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

Honor 7C ஆனது இரண்டு வகைப்பாட்டில் வருகிறது...

  • 3GB RAM மற்றும் 32GB நினைவக திறனுடன் வரும் Honor 7C-ன் விலை ரூ.9,999 ஆகும்.
  • 4GB RAM மற்றும் 64GB நினைவக திறனுடன் வரும் Honor 7C-ன் விலை ரூ.11,999 ஆகும்.

அமேசன் விற்பனை தளத்தின் சலுகையின் படி இந்த போனினை வட்டி இல்லா EMI வசதி மூலம் பெறலாம் எனவும், Jio சலுகையுடன் பெருகையில் ரூ.2200 வரை பணம் திரும்பப்பெறும் வசதி மற்றும் 100GB கூடுதல் 4G டேட்டாவினையும் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.

Honor 7C சிறப்பம்சங்கள்...

  • 5.9" HD+ தொடுதிரை.
  • Snapdragon 430  செயலி.
  • 3GB RAM, 32GB உள் நினைவகம் (அ) 6GB RAM, 64GB உள் நினைவகம்
  • 13MP + 2MP இரு பின் கேமிரா.
  • 8MP முன் கேமிரா.
  • 3000mAh பேட்டரி,
  • கைரேகை ஸ்கேனர்.

Trending News