உலக ஹெபடைடிஸ் நாள் 2017: ஹெபடைடிஸ் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?

Last Updated : Jul 28, 2017, 03:31 PM IST
உலக ஹெபடைடிஸ் நாள் 2017: ஹெபடைடிஸ் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? title=

ஹெபடைடிஸ் என்பது கல்லீரல் வீக்கமாகும், பொதுவாக இது வைரஸ் தொற்று காரணமாகவும், இதர பிற சாத்தியக்கூறுகள்னாலும் எற்படுகிறது. 

ஹெபடைடிஸ் வைரஸ்கள் பொதுவாக A, B, C, D மற்றும் E என ஐந்து வகைப்படுத்தப்படும்.

ஹெபடைடிஸ் ஒரு பெரிய உலகளாவிய சுகாதார பிரச்சனையாகவும், தொற்று நோய்யாகவும் பரவி, உலகம் முழுவதும் ஆண்டிற்கு சராசரியாக 400 மில்லியன் மக்கள் பாதிக்கிறது, ஒவ்வொரு ஆண்டும் ஹெபடைடிஸ் உலகம் முழுவதும் சுமார் 1.4 மில்லியன் மக்களைக் கொன்றுவிடுகிறது என்று கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின்(WHO) அறிக்கையின்படி, ஹெபடைடிஸ் C-வகை கொண்ட 95% மக்களை 2-3 மாதங்களுக்குள் முழுமையாக குணப்படுத்த முடியும் என கூறபடுகிறது.

ஹெபடைடிஸ் அபாயங்களைப் பற்றிய கூர்ந்த அறிவினை மக்கள் பெறுதல் வேண்டும், ஏனெனில் ஹெபடைடிஸ் வைரஸ் தொற்றுவதில் இருந்து அல்லது நோய்த்தாக்குதல் ஆகியவற்றிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள அவ்வறிவு உதவுகிறது.

எனவே, ஹெபடைடிஸ் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று அறிய கீழே உள்ள WHO வினாடி வினாவைப் பார்ப்போம்.

வினாக்கள் இங்கே: கிளிக் செய்யவும்

Trending News