மகாராஷ்டிரா கொரோனாவின் ஹாட் ஸ்பாட் ஆக மாறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் புதிய பாதிப்புகளும் 56 மரணங்களும் பதிவாகியுள்ளன
இந்த ஆண்டில் மாநிலத்தில் முதல் முறையாக ஒரே நாளில் சுமார் 16 ஆயிரம் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் வெள்ளிக்கிழமை, புதிய கொரோனா வழக்குகள் 15,817 பதிவாகியுள்ளன, 56 பேர் இறந்தனர். 11,344 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்,இது வரை 21,17,744 பேர் குணமாகியுள்ளனர்.
இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 22,82,191 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 52,723 பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,10,485 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, ஒரே நாளில் அதிகபட்சமாக 14,578 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியது, அதன் பிறகு தினசரி தொற்று பாதிப்புகள் (Corona Virus) குறையத் தொடங்கின. ஆனால் கடந்த சில நாட்களாக, கொரோனா மீண்டும் பயமுறுத்தும் வகையில் மிக அதிக அளவில் பரவி வருகிறது.
ஒரு நாள் முன்னதாக, நித்தி ஆயோக்கின் உடல் நலத் துறை உறுப்பினர் வி.கே. பால் மகாராஷ்டிராவில் (Maharashtra)கொரோனா வைரஸின் நிலை 'கவலைக்குரியதாக' உள்ளது என்று விவரித்தார். மார்ச் 15 முதல் 21 வரை நாக்பூரில் விதிக்கப்பட்ட பொது முடக்கம் குறித்து அவர் குறிப்பிடுகையில், "கோவிட் -19 தொற்றுநோயை பரவலை தடுக்க மீண்டும் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலையை உருவாகியுள்ளது." என்றார்
ALSO READ | உலகின் மருத்துவ மையமாக திகழும் இந்தியா: அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பாராட்டு
மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு பிறகு, நாக்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் முழுயான லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது, சில பகுதிகளில், அதிக கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, வரவிருக்கும் காலத்தில் மாநிலத்தில் கொரோனாவை சமாளிக்க சில நகரங்களில் லாக்டவுன் செயல்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளார். மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையை கட்டுபடுத்த இது அவசியம் என்று அவர் கூறுகிறார். அடுத்த சில நாட்களில் சில இடங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்று முதல்வர் கூறினார்.
ALSO READ | COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR