Winter Gut health Tips | குளிர்காலம் தொடங்கிவிட்டதால் மலச்சிக்கல் பிரச்சனை முதல் செரிமான கோளாறுகள் வரை அதிகரிக்க தொடங்கிவிட்டது. மோசமான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு முக்கிய காரணங்கள். குறிப்பாக, குளிர் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை குடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதனால் குடல் ஆரோக்கியம் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு பொதுவான காரணிகள்
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவு அதிகம் எடுத்துக் கொள்வதாலும், பதப்படுத்தப்பட்ட அல்லது பொறித்த வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது, உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவையும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும், இது குடல் செயல்பாட்டையும் சீர்குலைக்கும். ஆன்டிபயாடிக், இரும்புச்சத்து மருந்துகளும் மலச்சிக்கலை ஏற்படுத்தும். இதுதவிர எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS), ஹைப்போ தைராய்டிசம், நீரிழிவு நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள், நாட்பட்ட மன அழுத்தம் ஆகியவை மலச்சிக்கலுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கும்.
மேலும் படிக்க | இதயம் முதல் எலும்புகள் வரை... ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் எள்ளு
குடல் பிரச்சனைக்கு காரணம்
குடல் பிரச்சனைக்கு பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுதாகவும். சுத்தமான தண்ணீரை குடிக்காமல் அசுத்தமான தண்ணீரை குடிப்பதாகும். மழைக்காலங்களில் எப்போதும் தண்ணீரை காய்ச்சி மட்டுமே குடிக்க வேண்டும். ஆனால், இதை அசால்டாக நினைத்து தண்ணீர் குடிப்பதை பெரும் பொருட்டாக நினைப்பதில்லை. உண்மையில் தண்ணீர் வழியாகவே கெட்ட பாக்டீரியா, வைரஸ்கள் உடலுக்குள் செல்கின்றன. எனவே தண்ணீர் குடிப்பதில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.
மலச்சிக்கலை போக்க என்ன செய்ய வேண்டும்?
நார்ச்சத்து மிக்க உணவுகளை தினமும் அதிகம் சாப்பிடுவது, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த இறைச்சி உணவுகள் ஆகியவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும். செரிமானத்துக்கு சிக்கலை உண்டாக்கும் எந்த உணவுகளையும் சாப்பிடவே கூடாது. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தியானம், நடைப்பயிற்சி மிக அவசியம்.
மலச்சிக்கலை போக்கி, குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உணவுகள்
முருங்கை: முருங்கையில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் விளைவுகள் இருப்பதாக அறியப்படுகிறது, எனவே இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆளி விதைகள்: ஆளி விதைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது பெரிஸ்டால்சிஸுக்கு உதவுகிறது. குடலில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
இவைகளுடன் பேரீட்சை பழம், பட்டாணி, பூசணி விதைகள், கொய்யா, நெல்லிக்காய் ஜூஸ் ஆகியவற்றை சாப்பிட்டு வர குடல் ஆரோக்கியம் மேம்பட்டு ஆரோக்கியமாக இருப்பீர்கள். செரிமான பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் போய்விடும். மலச்சிக்கல் இருக்கவே இருக்காது. தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்தாலே பாதி செரிமான பிரச்சனைகள் தீர்ந்துவிடும். கூடவே, செரிமானம் மற்றும் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் நாட்பட்ட அளவில் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நாட்பட்ட பிரச்சனை கண்டுகொள்ளாமல் விடும்போது மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ