Hair Care Tips Tamil | தலைமுடி அழகாக இருக்க, மினுமினு என பளபளப்பாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் தலைமுடி பராமரிப்பு குறித்து அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முடி பராமரிப்பு என்பது வெறுமனே அழகை கூட்டுவதல்ல. உங்கள் ஆரோக்கியத்துடன் நேரடி தொடர்பு உடையது. ஆம், தலை முடியை பராமரிக்கவில்லை என்றால் உச்சந்தலையில் பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் முடி உதிர்வு, முடி கொடுத்தல் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். எப்போதும் தலை வறண்டு காணப்படும். முடி அழகு முக அழகையும் கெடுத்துவிடும். அதனால், தலைமுடி பராமரிப்பில் கவனம் செலுத்துகிறீர்கள் என்றால், எப்போது தலைக்கு குளிக்க வேண்டும், பகலில் குளித்தால் என்ன நன்மைகள், இரவில் குளித்தால் என்ன நன்மைகள், தலைமுடியை எப்படி உலர்த்த வேண்டும், தலைமுடியாமல் உலர்த்தாமல் விட்டால் என்ன பிரச்சனை வரும்? என்ற தகவல்களை எல்லாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்தவகையில் இப்போது தலைமுடியை இரவில் ஏன் கழுவக்கூடாது என்பதை பார்க்கலாம்.
இரவில் முடியை ஏன் கழுவக்கூடாது?
பகலில் நீங்கள் தலைக்கு குளித்த பிறகு, முடியை வெயிலில் சிறிது நேரம் உலர்த்துவீர்கள். காற்றோட்டமான இடங்களில் அமர்ந்து முடியில் இருக்கும் ஈரப்பதத்தை குறைப்பீர்கள். இதன் காரணமாக முடி விரைவாக காய்ந்துவிடும். அதே சமயம் இரவில் தலையைக் கழுவினால் முடி சீக்கிரம் வறண்டு போகாது. இதனை கவனிக்காத மக்கள் ஈரமான முடியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள். ஈரமான முடி பாக்டீரியா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ளது. உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை அதிகரிக்கும், இது நிகழும்போது, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரியும் பிரச்சனையும் அதிகரிக்கிறது.
பொடுகு பிரச்சனை அதிகரிக்கும்
அலர்ஜி பற்றிய ஐரோப்பிய இதழின் அறிக்கையின்படி, நீங்கள் ஈரமான முடியுடன் தூங்கும்போது, அது உச்சந்தலையில் ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும். இதன் காரணமாக மலாசீசியா என்ற தொற்று அதிகரிக்கத் தொடங்குகிறது. இது தலையை உலர்த்துவதன் மூலம் பொடுகு பிரச்சனையை அதிகரிக்கிறது. இதைத் தவிர, முடி ஈரமாக இருக்கும்போது மிகவும் பலவீனமாக இருக்கும்.நீங்கள் ஈரமான முடியுடன் தூங்கும்போது, முடி அதிகமாக உடைந்து, விரைவில் சேதமடையத் தொடங்கும்.
பகலில் முடியை கழுவ வேண்டும்
சரியான முடி பராமரிப்புக்காக, நிபுணர்கள் பகலில் முடியை கழுவ பரிந்துரைக்கின்றனர். ஆம், பகலில் முடியை கழுவும்போது அதனை முறையாக உலர்த்துவீர்கள். உச்சந்தலை மற்றும் முடியில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பது உறுதி செய்வீர்கள். ஆனால் இரவில் முடியை கழுவும்போது தூங்க செல்ல வேண்டும் என்ற ஆசையில் முடியை சரியாக உலர்த்தமாட்டீர்கள். இதன் காரணமாக உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதம் முடி ஆரோக்கியத்தை கெடுப்பதுடன், தலையில் பூஞ்சை வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. நாட்பட்ட அளவில் நீங்கள் கவனிக்காமல் விடும்போது ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்கியத்தையும் இந்த பூஞ்சை தொற்று பாதிக்கிறது. எனவே, எப்போது முடி கழுவினாலும் பகலில் கழுவுங்கள். முடிக்கும் நல்லது. ஆரோக்கியத்துக்கும் பிரச்சனை இருக்காது. கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம், எந்த நேரத்தில் நீங்கள் தலைக்கு குளித்தாலும் தலை மற்றும் தலைமுடி ஈரமாக இருக்க கூடாது. முழுவதுமாக உலர் வைத்த பிறகே அடுத்த வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | பயம் காட்டும் சுகர் லெவலை பக்குவமாய் குறைக்கும் பச்சை இலைகள்: சாப்பிட்டு பாருங்க
முடி ஆரோக்கியத்தை பாதிப்பது எவை?
முடி ஆரோக்கியத்துக்கு உணவு முறையும் முக்கியம். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டால் முடியும் பளபளப்பாக இருக்கும். இல்லையென்றால் முடி வறட்சிக்கு உணவு முறையும் காரணமாக அமையும். உதாரணமாக, உங்கள் உயரத்துக்கு ஏற்ற தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். காய்கறி, பழங்கள், கீரைகள் உங்கள் உணவில் தினசரி இடம்பெற வேண்டும். சரியான அளவில் மட்டுமே உணவுகளை மூன்று வேளைகளிலும் சாப்பிட வேண்டும். இவையெல்லாம் சரியாக இருந்தால் முடி, தோல் எல்லாமே சிறப்பாக இருந்து, அழகாக இருப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ