வீடியோ கேம் அடிக்ஸன் ஒரு ‘‘மனநோய்’’ என ஆய்வில் தகவல்!!

நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்கள் ‘மன நோயால்’ அதிகம் பாதிக்கபடுவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது! 

Last Updated : Jun 19, 2018, 03:56 PM IST
வீடியோ கேம் அடிக்ஸன் ஒரு ‘‘மனநோய்’’ என ஆய்வில் தகவல்!! title=

நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்கள் ‘மன நோயால்’ அதிகம் பாதிக்கபடுவதாக உலக சுகாதார அமைப்பு ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளது! 

ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு, சமீபத்தில் வெளியிட்டுள்ள நோய்கள் கையேட்டில் ‘விடாமல்’ தொடர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவது, மனநிலை சமந்தப்பட்ட ஒன்று என்று தெரிவித்துள்ளது. இது பல பெற்றோர்களின் அட்சத்தை உருதிபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. இதை தொடர்ந்து, வீடியோ கேம்ஸ் விளையாடும் அனைவரையும் அச்சுறுத்தும் என்றும் மனோதத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். 

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட கையேட்டில், ‘கேமிங் டிஸார்டர்’ என்று இந்த வகை நோயை பிரித்து தனியாக வகைமை படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை பிரச்சனைகளை நோய்களாக அங்கீகரித்து இது தொடர்பான விழிப்புணர்வை மருத்துவத்துறையினர் ஏற்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், வீடியோ கேம்ஸிற்கு அடிமையாவது, குழந்தைகளின் பள்ளி படிப்பை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், அது மொத்த குடும்ப அமைப்பையே பாதிப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கையேட்டை பல பெற்றோர்கள் வரவேற்றிருக்கிறார்கள். இதுபோன்ற வீடியோ கேம்ஸில் மூழ்கி விளையாடும் போது, போதைக்கு அடிமையான ஒருவரின் மூளை தூண்டப்படுவது போல் விளையாடுபவரின் மூளையும் தூண்டப்பட்டுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளது. 

இதை விளையாடுவதன் மூலம் கிடைக்கும் பரிசுகள், விளையாட்டு முடிவுகள், இதன் மூலம் அடையும் ஒரு வித அக எழுச்சி இவையாவும் மூளையின் நரம்புகளால் மிகக் கடுமையாகத் தூண்டபடுவதாகவும், இது ஒரு விதமான ‘காசில்லா சூதாட்டம்’ (போதையை தருவது) போன்றது எனவும் மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். 

அதே சமயத்தில், இது ‘வீடியோ அடிக்ஸன்’ நோய் உள்ளபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றும், இதனால் பாதிக்கப்பட்டோர் 1% முதல் 3% வரைதான் இருப்பார்கள், அதனால் விளையாடுபவர்கள் அனைவருமே இந்நோயால் பாதிக்கபட்டவர்கள் அல்ல, வீடியோ கேம்ஸ்கள் நம் தினசரி வாழ்வை பாதித்தால் மட்டுமே பிரச்னைக்குரிய ஒன்று எனவும் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

 

Trending News