உடல் எடையை குறைக்க வேண்டுமா…? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க..!

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் செய்யக்கூடாத செல்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்த டிப்ஸை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : Jul 15, 2023, 12:51 PM IST
  • உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவரா நீங்கள்?
  • சில விஷயங்களை உடல் எடையை குறைக்கும் போது செய்யக்கூடாது.
  • சிம்பிள் டிப்ஸ் இதோ.
உடல் எடையை குறைக்க வேண்டுமா…? அப்போ இதை மட்டும் செய்யாதீங்க..! title=

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்போர் சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சிலர் இதை தவறென தெரியாமல் செய்து கொண்டிருக்கின்றனர். அப்படி நீங்கள் உண்மையாகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என்று எண்ணினால் என்ன செய்ய கூடாது? 

கடும் முயற்சி தேவை:

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு திடமான மனம் மட்டுமன்றி கடைமையான முயற்சியும் தேவை. கடும் முயற்சி என்றால், ஆரம்பத்திலேயே அதிக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை.  டயட் இருப்பதற்கும், உங்கள் முயற்சியை நீங்கள் நம்புவதற்கும் நிறைய பொறுமை வேண்டும். அவையெல்லாம் உங்களிடம் இருக்கிறதா என்பதை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். 

மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க... ‘இந்த’ மேஜிக் பானங்கள் நிச்சயம் உதவும்!

1. காலை உணவை தவிர்க்காதீர்கள்:

காலை உணவுதான் நம் நாளின் முதல் உணவு. இரவு முழுவதும் உறக்கத்தில் இருக்கும் நாம், 8-10 மணி நேரம் கழித்து சாப்பிடும் முதல் உணவு அது. எனவே, எப்போதும் உங்கள் காலை உணவை தவிர்க்காதீர்கள். நீங்கள் உங்கள் நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க காலை உணவு மிகவும் அவசியம். மெட்டபாலிசத்தின் சக்தியை துரிதப்படுத்தவும் காலை உணவு அதிக அளவில் உதவும். உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்போர், காலையில் முட்டை, பழ சாலட், ஸ்மூதி, காய்கறி சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். 

2. துரித உணவுகளை தவிர்க்கவும்..

வெயிட் லாஸ் செய்யும் முயற்சியில் இருப்போர், கண்டிப்பாக துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். துரித உணவுகளில் அதிகளவில் கொழுப்பு சக்தி இருக்கும். எனவே, எண்ணெயில் வருத்தெடுக்கப்பட்ட உணவுகள் அல்லது அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். இது, உங்கள் உடலில் சோம்பேறி தனத்தை அதிகரித்து அதிகமாக உடல் ஏற வழிவகை செய்து விடுமாம். 

3. இனிப்பு வகைகள்:

உடல் எடை குறைப்பில் இருக்கும் போது கண்டிப்பாக அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும். அப்போதுதான் நமக்கு உடலில் நீர்சத்து அதிகமாக இருக்கும். அதே வேளையில் இனிப்பு நிறைந்த பானங்களை குடிப்பதோ அல்லது இனிப்பு வகை உணவுகளை உட்கொள்வதோ அறவே கூடாது. அதற்கு பதிலாக தண்ணீர் அதிகமாக பருகலாம். ஃப்ரெஷ் ஜூஸ் குட்கிக்கலாம், ஸ்மூதி வகை ட்ரிங்ஸ்களை அருந்தலாம். ABC ஜூஸ் எனப்படும் ஆப்பில், பீட்ரூட் மற்றும் காரட் வகை உணவுகளை சாப்பிடலாம். எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம். 

4. பட்டினி கிடக்கக்கூடாது:

டயட்டில் இருப்பது வேறு, ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது என்பது வேறு. இது உங்கள் உடல் எடை இழப்பு முயற்சிக்கு பேரிழப்பாக அமையும். சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் கண்டிப்பாக உடல் எடை குறையாது. அதனால், புரதம் நிறைந்த உணவை சரியான அளவில் எடுத்துக்கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்திடுங்கள். 

5.கூடுதல் உணவுகள்:

சில மருந்துகள் உடல் எடையை குறைக்க உதவும் என்று கூரி விற்பனை செய்வார்கள். இதை நம்பி ஏமாற வேண்டாம். இந்த வகையான உணவுகள் அல்லது பவுடர்களை வாங்கி சாப்பிடும் போது ஒன்றும் தெரியாது, ஆனால் இதற்கு பின்விளைவுகள் பல உள்ளன. இவை உங்கள் உடல் எடையை தற்போதைக்கு இழக்க வைத்தாலும் பின்னாளில் உங்கள் உடல் நலனை பிரச்சனையில் கொண்டு போய் விட்டுவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். 

6. அதீத உடற்பயிற்சி:

உடற்பயிற்சி என்பது உங்கள் கொழுப்பை குறக்கவும் உடலை திடமாக வைத்திருக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும், அதைத்தவிர்த்து நீங்களாக ஏடாகூடமாக அதீத உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது கூடாது. இது, தசை பிடிமானம், அல்லது தசை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே, எந்த பயிற்சி செய்வதற்கு முன்பும் கவனம் தேவை. 

மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் ஜாதிக்காய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News