அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள்

Belly Fat Diet: இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனைகளுக்கு தொப்பை கொழுப்பு தான் காரணம். எந்தெந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு தொப்பை கொழுப்பு பிரச்சனை வரலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 7, 2023, 03:22 PM IST
  • இவற்றை உட்கொள்வதால் தொப்பை கொழுப்பு பிரச்சனை ஏற்படும்.
  • தொப்பையை குறைப்பது எப்படி.
அடிவயிறு கொழுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கா? அப்போ உடனே இதை படியுங்கள் title=

தொப்பையை குறைப்பது எப்படி: இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோரின் பிரச்சனைகளுக்கு தொப்பை கொழுப்பு தான் முக்கிய காரணமாகும். ஆம், வயிற்றில் கொழுப்பு இருப்பது நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்களின் அபாயத்தை அதிகரிக்கச் செய்கிறது. மறுபுறம் தொப்பை கொழுப்புக்கு மரபணு காரணங்களாகவும் இருக்கலாம். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபடலாம். ஏனென்றால், சில சமயங்களில் உணவுப் பழக்கவழக்கங்களும் தொப்பையில் கொழுப்பு சேர்வதற்கு காரணமாக இருக்கலாம். ஆம், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள், போன்ற காரணங்களாலும் உங்களுக்கு தொப்பை கொழுப்பு ஏற்படத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் இருந்து தொப்பை கொழுப்பை ஏற்படுத்தக்கூடிய சில விஷயங்களை நீங்கள் விலக்க வேண்டும். வாருங்கள், எந்தெந்த பொருட்களை உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு தொப்பை பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இவற்றை உட்கொள்வதால் தொப்பை கொழுப்பு பிரச்சனை ஏற்படும்-

ஒயிட் பிரட் -
பெரும்பாலான வீடுகளில் காலை உணவு முதல் மாலை சிற்றுண்டி வரை ஒயிட் பிரட்டை தான் உண்ணுகின்றனர். ஆனால் அதன் குறைந்த நார்ச்சத்து அதை மிகவும் தீங்கு விளைவிக்கிறது. ஏனென்றால் இதை சாப்பிடுவது பசியை அடக்குகிறது, ஆனால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. எனவே, நீங்கள் தினமும் ஒயிட் பிரட்டை உட்கொண்டால், எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் இது உங்கள் தொப்பையை அதிகரிக்கச் செய்யும்.

மேலும் படிக்க | நரை முடியை மீண்டும் கருப்பாகனுமா? இந்த சாறை வாரத்திற்கு 3 நாட்கள் பயன்படுத்துங்கள்

சீரியல்ஸ் பிரேக்ஃபாஸ்ட் -
பெரும்பாலான மக்கள் காலை உணவில் கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுகிறார்கள், ஆனால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நீங்கள் கார்ன்ஃப்ளேக்ஸை உட்கொண்டால், உங்கள் தொப்பை கொழுப்பு வேகமாக அதிகரிக்கும். அதனால் தினமும் கார்ன்ஃப்ளேக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும். தினமும் கான்ஃப்லாக்ஸ் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

சோடா -
பலருக்கு தினமும் சோடா வாட்டர் குடிக்கும் பழக்கம் உள்ளது, ஆனால் சோடா வாட்டர் தொப்பையை அதிகரிக்கச் செய்யும். ஏனெனில் சோடா தண்ணீரில் 50 சதவீதம் சர்க்கரை உள்ளது, இது உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது.

ஆல்கஹால் - 
ஆல்கஹால் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. இவற்றை நீங்கள் தொடர்ந்து அருந்தும்போது, அது உங்கள் உடலின் நடுப்பகுதியில் கொழுப்பைச் சேமிக்கும். மேலும், இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் குறைத்து, கொழுப்பை எரிப்பதை கடினமாக்குகிறது. இதனால், உங்கள் உடல் பருமன் அதிகரிக்கலாம்.

சிப்ஸ் - 
சிப்ஸ் மற்றும் பிற உப்பு தின்பண்டங்களில் கலோரிகள் அதிகம் உள்ளது. அதனால், விரைவில் உங்கள் வயிற்றில் தொப்பை கொழுப்பை சேர்க்கலாம். பல சிப்ஸ்கள் மற்றும் பிற உப்பு தின்பண்டங்களில் கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை அதிக சாப்பிட உங்களை தூண்டலாம். இதனால், உங்கள் எடை அதிகரிக்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கருத்தரிப்பதில் சிக்கலா? கவலை வேண்டாம்! நம்பிக்கையூட்டும் கொரிய விஞ்ஞானிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News