வைட்டமின் பி 12 சத்தின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. உடலில் வளர்சிதை மாற்றத்திலிருந்து DNA சின்தஸிஸ் மற்றும் சிவப்பு இரத்த அணுக்கள் வரை பல முக்கிய செயல்பாட்டுகளுக்கு விட்டமின் B12 தேவைப்படுகிறது. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், அது பல உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும். நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வைட்டமின் B12 மிகவும் முக்கியம்.இதன் முக்கியத்துவம் பலருக்கு தெரிவிதில்லை. வைட்டமின் B12 குறைபாடு பலருக்கு வெளிர் தோல் நிறம், நாவின் மஞ்சள் அல்லது சிவப்பு நிறம், வாய் புண்கள், தோலில் ஏதோ குத்துவது போன்ற உணர்வு, பலவீனமான கண்பார்வை, எரிச்சல், மனச்சோர்வு போன்ற பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். வைட்டமின் B12 குறைபாடு உங்கள் மன வலிமை, செயல் திறனை குறைக்கும்.
வைட்டமின் பி12 நிறைந்த உணவுகள்
நம் உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதை தவிர்க்க, தினசரி உணவில் இறைச்சி, மீன், கோழி, முட்டை மற்றும் பால் போன்ற பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். சைவ உணவு இந்த வைட்டமின் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். சைவ உணவு பிரியர்கள் பால், தயிர், பன்னீர் அல்லது சீஸ் சாப்பிடலாம். இதன் மூலம், உங்களுக்கு இயற்கையாகவே வைட்டமின் பி 12 கிடைக்கும்.
வைட்டமின் பி12 கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி12 உள்ள உணவை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டும். கர்ப்ப காலத்தில் இந்த முக்கிய ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால், குழந்தை பிறக்கும் போது மூளை மற்றும் முதுகுத்தண்டில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க | முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா... நிபுணர்கள் கூறுவது என்ன..!!
மேலும், வைட்டமின் பி 12 சத்தினால் உடலில் ரத்த சோகை ஏற்படாது. வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை சரியான அளவில் உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த சோகை இருக்காது என்கின்றனர் வல்லுநர்கள். இதன் குறைபாட்டினால் இரத்த சிவப்பணுக்கள் குறையத் தொடங்குவதால், இந்த ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் இரத்த சோகைக்கு ஆளாகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ