கொரோனா காரணமாக கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்: ஐநா

கோவிட் 19 தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைககள் மேலும் பத்து  ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2020, 09:54 PM IST
  • கொரோனா காரணமாக கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படும் அபாயம்.
  • மேலும் பத்து ஆண்டுகளுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு நீடிக்கும் என ஐநா ஆய்வு கூறுகிறது.
  • அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம் இணைந்து இந்த ஆய்வை நடத்தியது.
கொரோனா காரணமாக கோடிக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்படுவார்கள்: ஐநா title=

உலகம் இப்போது கொரோனா வைரஸுடன் போராடி வருகிறது. தொற்று பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அடுத்த பத்து ஆண்டுகளில், கொரோனா காரணமாக பல துறைகளில் ஏற்பட்ட பாதிப்பு பலரை வறுமையில் தள்ளும் என கூறியுள்ளது.

கோவிட் 19 (COVID-19) தொற்று நோய் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைககள் மேலும் பத்து  ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று ஐநாவின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஐநா அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பாக, 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் மேலும் 20.70 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்கள் என்றும் இதன் மூலம் கடுமையான ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கும் மேல் அதிகரிக்கும் என ஐ.நா. பகீர் தகவல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பாக உலகளவில் 4.40 கோடிக்கும் அதிகமான மக்கள் மோசமான வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று சர்வதேச நிதியம்(IMF) எடுத்த கணக்கெடுப்பில் மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் 100 கோடியாக அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது

ஆனால், இப்போது கொரோனா (Corona) காரணமாக பல துறைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவையும் பாதிப்பையும்  கவனத்தில் கொண்டு, நிலையான வளர்ச்சிக்கான திட்டங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், சுமார் 14.6 கோடி மக்களை மோசமான வறுமையிலிருந்து மீட்கலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள டென்வர் பல்கலைக்கழகம் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம்  இணைந்து  இந்த ஆய்வை நடத்தியது. 

ALSO READ | அமெரிக்காவில் பட்டை கிளப்பும் நம்ம “ரசம்”.. காரணம் என்ன தெரியுமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News