கல்லீரலின் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்தும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 19, 2023, 05:30 PM IST
  • கல்லீரலை சுத்தப்படுத்துவது உடலின் முழு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது
  • கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும் மூலிகைகள்
  • கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுர்வேத மூலிகை கீழாநெல்லி.
கல்லீரலின் நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்தும் ‘சில’ அற்புத மூலிகைகள்! title=

உடலின் மிக முக்கிய பாகங்களில் ஒன்றான கல்லீரலில் எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டாலும், உங்கள்  உடலின்  மொத்த ஆரோக்கியத்திற்கும் பெரும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உணவை ஜீரணிக்கவும் மற்றும் வளர்சிதை மாற்றம் செய்வதற்கும் கல்லீரல் செயல்படுகிறது. உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.

 

நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், குடித்தாலும் ஜீரணிக்கும் வேலையை கல்லீரல் செய்வதுடன், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது. இதன் பொருள் கல்லீரலில் நச்சுகள் மற்றும் கழிவுகள் குவிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கல்லீரலில் அழுக்கு குவிவதால், கல்லீரல் தொடர்பான பல தீவிர நோய்கள் பிற்காலத்தில் வரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்று, அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி, உலக கல்லீரல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்து நச்சுக்களை நீக்கும் சில சக்திவாய்ந்த ஆயுர்வேத மூலிகைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்

கல்லீரலை சுத்தம் செய்வதன் முக்கியத்துவம்

கல்லீரல் கொழுப்பை நீக்குகிறது மற்றும் பித்தத்தை உருவாக்குவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது,இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை நீக்குகிறது. கல்லீரலை சுத்தப்படுத்த தவறினால் கல்லீரல் அழற்சி, ஹெபடைடிஸ், ஆல்கஹால் ஹெபடைடிஸ் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.
கல்லீரலை சுத்தப்படுத்துவது உடலின் முழு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் ஆயுளை நீடிக்கிறது. 

கல்லீரலை இயற்கையாகவே சுத்தம் செய்யும்  மூலிகைகள்

ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுவதே கல்லீரலை சுத்தம் செய்வதற்கான சிறந்த வழி. இது தவிர, மது அருந்துவதைத் தவிர்ப்பது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க எளிதான வழியாகும். தினமும் பயன்படுத்தும் சில ஆயுர்வேத மூலிகைகள் மூலம் கல்லீரலை நச்சு நீக்கவும்,  கல்லீரல் பிரச்சினைகள்  நம்மை அண்டாமல்  இருக்கவும் உதவும்.

கீழாநெல்லி

கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுர்வேத மூலிகை கீழாநெல்லி. இதில் உள்ள கல்லீரல் சுத்திகரிப்பு பண்புகள் பித்தம் மற்றும் கபத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தப்படுத்தவும், நச்சுக்களை அகற்றவும், கல்லீரலை வலுப்படுத்தவும் இந்த மூலிகை அற்புதமாக வேலை செய்கிறது .

கடுகு ரோகிணி

கடுகு ரோகிணி கல்லீரலின் நச்சுத்தன்மையை வெளியேற்றும் குணத்தை கொண்டது குறிப்பாக கல்லீரலில் இருக்கும் நஞ்சை வெளியேற்றும் மூலிகையாக கருதப்படுகிறது. இதன் கசப்பான குணம் கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆயுர்வேதத்தில் கடுகு ரோகிணி கபம் மற்றும் பித்த தோஷங்களை சமநிலைப்படுத்த செய்கிறது.

மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!

சீந்தில் 

குடுச்சி அல்லது சீந்தில் ஒரு சக்திவாய்ந்த நச்சு மூலிகையாகும். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை வலுப்படுத்தி சுத்தப்படுத்துகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் காணப்படுகின்றன. பித்தத்தை சீராக்குகிறது

நெல்லிக்காய்

ஆம்லா என்னும் நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் பொக்கிஷமாகும். இது மோசமான பித்த அளவை சீராக்கும் திறன் கொண்டது. இது செரிமான அமைப்பில் இருந்து நச்சுகளை அகற்ற வேலை செய்கிறது. கல்லீரல் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

மஞ்சள்

மஞ்சள் தோல், செரிமானம், கல்லீரல் மற்றும் மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும். உணவின் சுவை மற்றும் நிறத்தை அதிகரிக்கும் மஞ்சள், நச்சு நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, அதனால்தான் இது கல்லீரலின் அனைத்து திசுக்கள் மற்றும் செல்களை மேம்படுத்துகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | Mental Health: கண்ணீர் விடும் மனது... 6 அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News