விதைப்பை புற்றுநோய்
ஆண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான புற்றுநோய்களில் விதைப்பை புற்றுநோயும் ஒன்று. உலகளவில் இந்த புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் உள்ளிட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது. மோசமான வாழ்க்கை தரம், உணவு முறை உள்ளிட்ட காரணங்கள் இத்தகைய பிரச்சனைகள் உருவாகின்றன. 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகம் இந்த பாதிப்புக்குள்ளாகும் நிலையில், இப்போது இளம் வயதினருக்கும் இந்த பாதிப்பு வந்து கொண்டிருக்கிறது. மிதமாக இருக்கும்போது கண்டறிந்தால் நீண்ட நாட்களுக்கு மருந்து உட்கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால் ஆபத்து: இந்த அறிகுறிகள் தோன்றும், ஜாக்கிரதை!!
விதைப்பை புற்றுநோய் அறிகுறிகள்
விதைப்பை புற்றுநோயை கண்டறிவதற்கான சிறப்பு அறிகுறிகள் எதுவும் இல்லை. 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அவ்வபோது இதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே விதைப்பை புற்றுநோய் இருந்தால், அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் 40 வயதில் இருந்தே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பொதுவான அறிகுறிகள் என்றால் சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் வருவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் அல்லது விந்து திரவத்தில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போதும், விந்து வெளியேற்றும்போதும் மிகுந்த வலி, இடுப்பு வலி, பின்பக்க வலி, தொடைப்பகுதிகளில் வலி ஆகியவை தென்படும்.
பரிசோதனைகள்
விதைப்பை புற்றுநோயை கண்டறிவதற்கு டிரான்ஸ் ரெக்டல் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை அல்லது டிரஸ் பயாப்ஸி போன்ற பரிசோதனை முறைகள் கையாளப்படுகின்றன. புற்றுநோயை கண்டறிந்தவுடன் அதன் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அது எந்த நிலையில் இருக்கிறது என்று வகைப்படுத்தப்படுகிறது.
சிகிச்சை வழிமுறைகள்
விதைப்பை புற்றுநோய் பாதிப்பு தன்மை மற்றும் அதன் நிலையை க்ளீசன் ஸ்கோர் மற்றும் பிஎஸ்ஏ அளவுகள் என்ற ரீதியில் குறிப்பிடுகின்றனர். பாதிப்பின் தீவிரத்தன்மையை பொருத்து மருந்துகளை உட்கொள்ளுதல், அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, ஹார்மோன் குறைப்பு சிகிச்சை போன்றவற்றை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
மேலும் படிக்க | சூட்டை தணிக்கும் துளசி விதை..! கொட்டி கிடக்கும் கோடி மகத்துவம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ