அசைவம் சாப்பிடுவதில் இந்திய அளவில் தெலுங்கானா டாப், தமிழ்நாடு நான்காவது இடம்

Last Updated : Jun 13, 2016, 02:27 PM IST
அசைவம் சாப்பிடுவதில் இந்திய அளவில் தெலுங்கானா டாப், தமிழ்நாடு நான்காவது இடம் title=

இந்தியாவில் இறைச்சி அதிகமாக விரும்பி சாப்பிடும் மக்கள் இருக்கும் மாநிலம் எது தெரியுமா? அது இந்தியாவின் புதிய மாநிலமான தெலுங்கானா தான்!!

ஆய்வில் தெலுங்கானா மக்கள் தொகையில்  கிட்டத்தட்ட 99% அசைவ உணவை மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்று தெரிய வருகிறது. ஆண்கள் 98.8 சதவிதமும் மற்றும் பெண்கள் 98.6சதவிதமும் இறைச்சியை விரும்பி சாப்பிடுவதாக தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் வயதுடைய மக்கள் மத்தியில் நடத்தப்பட்டது.

அதிக அசைவம் சாப்பிடும் மக்கள் தொகை அடிப்படையில் தெலுங்கானாவிற்கு அடுத்தப்படியா மேற்கு வங்காளம், ஆந்திரா, தமிழ் நாடு, ஒடிசா மற்றும் கேரள தொடர்ந்து வருகிறது. 

சைவம் அதிகம் சாப்பிடும் மக்களை கொண்ட மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிலும், அடுத்தாக பஞ்சாப் மற்றும் அரியானா  தொடர்ந்து வருகிறது.

'தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஆய்வின் படி இந்தியா முழுவதும் சைவம் உண்ணும் மக்கள்தொகை 2014-ம் ஆண்டு 75% ஆகும். இது 2004-ல் 71 சதவிதமாக இருந்தது. இதனை பார்க்கும் போது சைவ உணவை விரும்பி சாப்பிடும் மக்கள் குறைந்துள்ளனர்.

Trending News