சாக்லேட் பாய் மாதவனையும் விடாத கொரோனா; மாதவனின் Virus ட்வீட்

நடிகர் தனது ஹிட் படமான `3 இடியட்ஸ்` ஐ குறிப்பிட்டு, நகைச்சுவையுடன் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2021, 03:38 PM IST
  • 3 இடியட்ஸ் படம் தமிழல் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.
  • படத்தில் மாதவன் ஃபர்ஹானாக நடித்தார்.
  • அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார்.
சாக்லேட் பாய் மாதவனையும் விடாத கொரோனா; மாதவனின் Virus ட்வீட்   title=

நடிகர் மாதவனுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. நடிகர் தனது ஹிட் படமான `3 இடியட்ஸ்` ஐ குறிப்பிட்டு, நகைச்சுவையுடன் சமூக ஊடகங்களில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்தி நடிகர் அமீர்கானுடன் `3 இடியட்ஸ்` (3 Idiots) படத்தில் நடித்த மாதவன், தனக்கு கோவிட் -19 தொற்று உள்ளது என்ற தகவலை மிக வேடிக்கையாக பகிர்ந்துள்ளார். 

படத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மாதவன் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார், "ஃபர்ஹான் எப்போதும் ராஞ்சோவை தான் ஃபாலோ செய்தார், வைரஸ் எப்போதுமே எங்களுக்குப் பின்னால் தான் இருந்தார், ஆனால் இப்போது வைரஸ் வசமாக மாட்டிக் கொண்டார். ஆனால் எல்லாம் நலமாய் தான் இருக்கிறது,  இந்த இடத்திற்கு ராஜூ வருவதை நாங்கள் விரும்பவில்லை. அனைவரது அன்பிற்கும் நன்றி. நான் சீக்கிரம் குணமடைவேன். " அமீர் கானுக்கு தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு மாதவனனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

படத்தில் மாதவன் ஃபர்ஹானாக நடித்தார், ஆமிர் ராஞ்சோவாகவும், ஷர்மன் ஜோஷி ராஜுவாகவும், போமன் இரானி வில்லன் விரு சஹஸ்த்ரபூதி (வைரஸ்) ஆகவும் நடித்தார். 2009 ஆம் ஆண்டில் வெளியான இந்த படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது. ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

3 இடியட்ஸ் படம் தமிழல் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார்

போபாலில் `அம்ரிக்கி பண்டிட்` (Amriki Pandit) படத்தின் செட்களில் இருந்து மாதவன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

 அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான `மாறா'வில் நடித்த மாதவன், விஞ்ஞானி நம்பி நாராயணனின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தனது வரவிருக்கும் `ராக்கெட்ரி'படத்திலும் நடித்து வருகிறார்.

ALSO READ | Corona Vaccination: 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி. ஏப்ரல் 1 முதல் விதிகளில் மாற்றம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News