ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு இதுதான்...

குளிர்காலத்தில் இதை சாப்பிட்டால் ஆரோக்கியம் தான்...ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு இதுதான்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 14, 2022, 11:52 PM IST
  • உணவே மருந்து, சீரான உணவு உண்டால் மருந்துக்கு தேவையில்லை
  • பெட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்
  • உணவே மருந்து என்பதை உறுதி செய்யும் உணவுகள்
ஆரோக்கியத்தை உறுதி செய்யும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு இதுதான்... title=

வெப்பநிலை குறையத் தொடங்கும் போது, ​​ஆடைகள் மட்டுமல்ல, உணவுகளும் உடலின் வெப்பத்தை பராமரிக்கின்றன. கனமான கம்பளி ஆடைகளை அணிவது மட்டுமே குளிரை சமாளிக்கப் போதாது. ஆரோக்கியமான குளிர்கால உணவுகளை உண்பது, நோயின்றி ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

குளிர்காலத்தை எதிர்கொள்ள தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுகள் இவை...

வெல்லம்
வெல்லம் ஒவ்வொரு இனிப்பு உணவிற்கும் ஒரு கவர்ச்சியான சுவையை சேர்க்கிறது மற்றும் இருமல், சளி அல்லது நுரையீரல் தொற்றுக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. சர்க்கரையை விட ஆரோக்கியமானது வெல்லம் என்பது மட்டுமல்ல, குளிர்காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்கவும் வெல்லம் அவசியம்.

சூப்கள்
குளிர்காலத்தை சமாளிக்க சூப்பை விட வேறு எதுவும் சிறப்பாக செயல்படாது. குளிர்காலத்தில் நம்மை சூடாக வைத்திருக்கவும், செரிமான அமைப்பை பராமரிக்கவும் சூப்கள் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். கீரை, செலரி, ப்ரோக்கோலி, காளான், ப்ரோக்கோலி, பீன்ஸ், பீட்ரூட் போன்றவை உடலை ஆரோக்கியமாக பராமரிக்கும்.

மேலும் படிக்க | வேகவைத்த ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

முட்டை

ஒரு நாளைக்கு ஒரு முட்டை ஒரு டாக்டரை விலக்கி வைக்கிறது தெரியுமா? முட்டைகளை சாப்பிடுவது புரதம், ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதோடு குளிர்காலத்தில் ஆரோக்கியமான உணவாகவும் அமைகிறது. வெ

கேரட் / பீட்ரூட் / ப்ரோக்கோலி / டர்னிப்ஸ் போன்றவை.
இந்த காய்கறிகளை சாலடுகள் போன்ற பல வடிவங்களில் உட்கொள்ளலாம், அவை அனைத்தும் வைட்டமின்-ஏ உள்ளடக்கம் நிறைந்தவை, இது நோய்த்தொற்றுகள் மற்றும் ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்கிறது. மேலும், செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட சர்க்கரைவள்ளிக்கிழங்கு அனைவருக்கும் ஏற்ற ஓர் உணவாகும்.

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!

நெல்லிக்காய்/ஆரஞ்சு/கிவி/ கினோ

இவை வைட்டமின் சி நிறைந்த சப்ளிமெண்ட்ஸ் ஆகும், இவை, பொதுவான காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கோவிட்-19ஐ திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும் முக்கியமானது.

கொட்டைகள்
குளிர்காலத்தில் உங்களை சூடாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும் சிறந்த உணவுகளில் நட்ஸ் ஒன்றாகும். சீசன் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News