ரஷ்யாவின் "Sputnik V" தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் ஒப்பந்தம்

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ள நிலையில், அந்த இலைக்கை எட்ட இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2021, 05:42 PM IST
ரஷ்யாவின் "Sputnik V" தடுப்பூசியை தயாரிக்க சீரம் நிறுவனம் ஒப்பந்தம் title=

ஸ்புட்னிக் வி (Sputnik V)கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசியை செப்டம்பர் மாதம் முதல் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவிஷீல்ட் (COVISHIELD) தடுப்பூசியையும் SII நிறுவனம் தான் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனத்தில், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிக்கப்படும். இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 30 கோடி தடுப்பூசி (Corona Vaccine) தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

ALSO READ | Corona Nasal Vaccine: மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி, ஒரு மைல்கல்லாக இருக்குமா..!!!

டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தகுதி கொண்ட அனைவருக்குமே தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்ததுள்ள நிலையில், அந்த இலைக்கை எட்ட இது மிகவும் உதவிகரமானதாக இருக்கும். 

இதுவரை, ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) தடுப்பூசிக்கு உலகளவில் 67 நாடுகளில் அனுமதி கிடைத்துள்ளது. இந்தியாவை தவிர அர்ஜென்டினா, பஹ்ரைன், ஹங்கேரி, செர்பியா, மெக்ஸிகோ, சான் மரினோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பயன்படுத்துகின்றன.

தற்போது, இந்தியாவில், கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் பைசர்,மாடர்னா தடுப்பூசிகளும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது தவிர, மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளதால், கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அது ஒரு கேம் சேஞ்சர் ஆக இருக்கும் என கூறப்படுகிறது

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி உள்ள நிலையில், குழந்தைகளுக்கு இது மிகவும் பாதுகாப்பானது என கூறப்படுவதால், அது எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.   அதுவும் மூன்றாம் அலை குறித்த அச்சம் நிலவி வரும் சூழ்நிலையில், தடுப்பூசியினால், மட்டுமே நிலைமை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதினால், மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. 

ALSO READ | இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று
 

Trending News