ராக்கெட்டுல தக்காளி விலை பறந்தாலும், இந்த பொருட்கள் இருக்கும்போது கவலை ஏன்?

Tomato And Its Alternatives: தக்காளியின் அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு மாற்றாக என்னென்ன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, நமது உணவில் சுவையையும், ஆரோக்கியத்தையும் கூட்டலாம்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2023, 05:02 PM IST
  • தக்காளியின் பண்புகளைக் கொண்ட மாற்றுப் பொருட்கள்
  • உச்சத்தில் தக்காளி விலை
  • தக்காளியின் சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும் காய்கனிகள்
ராக்கெட்டுல தக்காளி விலை பறந்தாலும், இந்த பொருட்கள் இருக்கும்போது கவலை ஏன்? title=

இந்தியா முழுவதும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதன் விலை பல்வேறு மாநிலங்களில் அதிகரித்துள்ளது மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி இல்லாமல் சமைக்கவே முடியாது என்ற அளவில் சில வீடுகளில் தக்காளி பயன்பாடு இருக்கும். தக்காளி விலையும் கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாயிலிருந்து 180 ரூபாய் வரை கடந்த வாரங்களில் விற்கப்பட்டது. 

ஆனால், தக்காளி உணவுக்கு ருசியூட்டும் ஒரு பொருள் மட்டும் என்றால், அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அதுவொரு, சத்துள்ள உணவுப்பொருள் என்பதால், தக்காளியில்லாத உணவு பலருக்கு பிடிப்பதில்லை.

தினமும் தக்காளியை உட்கொள்வதன் மூலம், தோல் புற்றுநோய் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தக்காளியின் திறனை விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வுகளில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதைத்தவிர, தக்காளியின் எண்ணற்ற பண்புகள், நமது தினசரி வாழ்க்கையை மேற்கொள்ள தேவையான ஆற்றலைத் தருபவை. ஆனால், தக்காளியின் விலை உச்சத்தில் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் தக்காளி வாங்க முடியாமல் தவிக்கின்றனர். 

மேலும் படிக்க | மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை ஒரு போதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

எனவே, தக்காளியின் அளவைக் குறைத்துக் கொண்டு அதற்கு மாற்றாக என்னென்ன உணவுப் பொருட்களை பயன்படுத்தி, நமது உணவில் சுவையையும், ஆரோக்கியத்தையும் கூட்டலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

தக்காளியின் விலை உயர்வால், அதன் சத்து கிடைக்காததால், வைட்டமின் சியை கொடுக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.  

தக்காளியின் சப்ஸ்டிட்யூட் 
தக்காளியில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தக்காளியின் சுவையை ஈடு செய்யும் புளியை உணவில் சேர்க்கவும்.

மேலும் படிக்க | பலவீனம், சோர்வை நீக்கி ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் ‘சில’ உணவுகள்!

புளியின் சுவை

உணவின் சுவையை அதிகரிக்க தக்காளிக்கு பதிலாக புளி சேர்க்கலாம். இது ஒரு சிறந்த மற்றும் நல்ல விருப்பமாக இருக்கலாம். அதோடு, புளி நீண்ட காலத்துக்கு சேமித்து வைக்கக்கூடியது ஆகும்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல மற்றும் ஆரோக்கியமான விருப்பமாக இருக்கும். தக்காளிக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தலாம். இதனால் உணவில் புளிப்புத்தன்மையும் அதிகரிக்கும். மேலும், உணவின் சுவையும் சிறப்பாக மாற்றும்.

நெல்லிக்காய்
தக்காளிக்கு பதிலாக நெல்லிக்காயையும் உணவில் பயன்படுத்தலாம். இதை சந்தையில் மிக எளிதாகக் கிடைக்கிறது. இதனுடன், காய்கறியின் சுவையும் நன்றாக இருக்கும். தக்காளிக்கு பதிலாக நெல்லிக்காய் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். 

மாங்காய்
மாங்காய் என்றாலே புளிப்பு சுவை தான் நினைவுக்கு வரும். உணவில் புளிப்புத்தன்மையை அதிகரிக்கும் மாங்காயை உணவில் சேர்த்துக் கொள்வது சுவையையும் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும். வைட்டமின் சி நிறைந்துள்ள மாங்காய், பருவக்கால பழம் என்பதால், கடையில் கிடைக்கும் மாங்காய்ப்பொடியை உணவில் சேர்க்கலாம்.   

குடைமிளகாய்
உணவில் புளிப்புத் தன்மையை சேர்க்க புளி மற்றும் எலுமிச்சைக்கு அடுத்த இடத்தை பிடிப்பது குடமிளகாய் ஆகும். வைட்டமின் சியின் நல்ல மூலமான குடைமிளகாயை உணவில் சேர்த்தால், தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களில் பெரும்பாலானவை இதில் கிடைத்துவிடும். உணவின் சுவையும் அபரிமிதமாக இருக்கும்.  

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் தவிர்க்க வேண்டிய 5 உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News