Fit India 2020: உடல் நலனுடன் மன நலமும் முக்கியம் என்கிறார் பிரதமர் மோடி

ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களுடன் உரையாடினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 05:44 PM IST
  • ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களுடன் உரையாடினார்.
  • பிரதமர் மோடி தனது உரையில் “fit India” என்றால் “hit India” என்றும், மக்கள் இந்த இயக்கத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்
Fit India 2020: உடல் நலனுடன் மன நலமும் முக்கியம் என்கிறார் பிரதமர் மோடி  title=

ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை, நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களுடன் உரையாடினார்.

இந்நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, மாடலும் தீவிர ஓட்டப்பந்தய வீரருமான மிலிந்த் சோமன், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் பிற உடற்பயிற்சி மற்றும் உடல் நலத்துறையில் உள்ளவர்கள் பங்கேற்றனர்.

மோடியின் சிந்தனையில் உருவான ஃபிட் இந்தியா இயக்கம் தொடர்பான உரையாடல், இந்தியாவை ஒரு ஃபிட்டான தேசமாக மாற்றுவதற்கான திட்டத்தை வகுக்க நாட்டின் குடிமக்களை ஈடுபடுத்தும் மற்றொரு முயற்சி.

ஃபிட் இந்தியா இயக்கம் என்பது, செலவு ஏதும் இன்றி, எளிய முறையில், குடிமக்கள் தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கான வழிகளை பின்பற்ற ஊக்குவிக்கும் திட்டம் ஆகும். 

ஒவ்வொரு இந்தியரின் வாழ்க்கையிலும் ஃபிட்னஸ் என்பது இன்றையமையாத பகுதி என்பதை உணர்த்தும் வகையில், இது ஃபிட் இந்தியா இயக்கம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய உரையாடலின் முக்கிய குறிக்கோள் ஆகும். 

பிரதமர் மோடி தனது உரையில் “fit India” என்றால் “hit India” என்றும், மக்கள் இந்த இயக்கத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

உடல் நலனை போல் மன நலனும் மிகவும் அவசியமான ஒன்று எனவும் பிரதமர் தெரிவித்தார். 

தினமும் அரை மணி நேரம், கபடி, டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு மக்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருக்கலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | பிரிவினையில் தொலைந்தவரின் கண்ணீர் வாழ்வு....WhatsApp அழைப்பால் இணைந்தது உறவு..!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News