Omicron’s BF.7: யாரெல்லாம் உடனடியாக ஒமிக்ரான் டெஸ்ட் எடுக்க வேண்டும்?

வேகமாக மாறி வரும் ஒமிக்ரான் பிஎப் 7 (Omicron’s BF.7) வேரியண்ட் பொதுவாக அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. இந்த மாறுபாடுகள் பெரும்பாலான இந்தியர்களுக்கு லேசானவையாக இருக்கிறது. வயதானவர்கள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் தவிர பாதுகாப்பாக இருக்க வேண்டும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2022, 06:43 AM IST
  • இந்தியாவில் வேகமாக பரவும் ஒமிக்ரான்
  • ஒமிக்ரானின் மிக முக்கியமான அறிகுறி
  • இந்த அறிகுறிகளை யாரும் புறக்கணிக்காதீர்கள்
Omicron’s BF.7: யாரெல்லாம் உடனடியாக ஒமிக்ரான் டெஸ்ட் எடுக்க வேண்டும்? title=

உலகெங்கிலும் கோவிட்-19 அச்சுறுத்தல் பெரும் சவாலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வாரம்தோறும் 35 லட்சத்துக்கும் அதிகமான்னோர் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். ஏற்கனவே பல வேரியண்டுகளின் பரவல் அச்சுறுத்தலாக இருந்த நிலையில், இப்போது புதிய மாறுபாடு உலகளவில் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. ஒமிக்ரான் பிஎப் 7 பரவல் காரணமாக தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

ஒமிக்ரான் பிஎப் 7 பரிசோதனை

ஐசிஎம்ஆர் ஆலோசனையின்படி, 

* இருமல், காய்ச்சல், தொண்டை புண், சுவை மற்றும்/அல்லது வாசனை இழப்பு, மூச்சுத்திணறல் மற்றும்/அல்லது பிற சுவாச அறிகுறிகள் இருக்கும் நபர்கள்.

* ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். குறிப்பாக, 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட நுரையீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.

* சர்வதேச பயணத்தை மேற்கொள்ளும் தனிநபர்கள்

* இந்திய விமான நிலையங்கள் / துறைமுகங்கள் / நுழைவுத் துறைமுகங்களுக்கு வரும் சர்வதேச பயணிகள்.

ஆகியோர் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். 

மேலும் படிக்க |  ஒமிக்ரான் பிஎப் 7-ன் இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்

சோதனை ஏன் முக்கியமானது?

சீனாவில் ஒமிக்ரான் பிஎப் 7 வேரியண்ட் அதிகளவில் பரவிக் கொண்டிருக்கிறது. முந்தைய வேரியண்டுகளைப் போலவே வேகமாக பரவிக் கொண்டிருப்பதால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்கள் அனைவரும் சோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

அறிகுறிகள் என்ன?

உடல்வலி, தலைவலி, மேல் சுவாசக் குழாய் தொற்று போன்றவற்றுடன் கூடிய அசாதாரண காய்ச்சலைக் கண்காணிக்க வேண்டும். மூச்சுத் திணறல், ஆக்ஸிஜன் செறிவு குறைதல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். பொதுவாக, முந்தைய வேரியண்டுகளினால் ஏற்பட்ட அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை. வயதானவர்கள் அல்லது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி அல்லது இணை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இந்த மாறுபாடு லேசானவையாகவே உள்ளது.

ஒருவர் எப்போது பரிசோதனை செய்ய வேண்டும்?

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் நிச்சயம் உங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இத்தகைய தொடர்புகள் உங்களுக்கு ஏதும் இல்லை என்றால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை 

என்ன சோதனைகள் உள்ளன?

ஐசிஎம்ஆரின் கூற்றுப்படி, இந்தியாவில் SARS-CoV-2 நோயைக் கண்டறிவதில் RTPCR மற்றும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் (RAT) முதன்மையானவை. ICMR-ன் வழிகாட்டுதல்களின்படி, TrueNat, CBNAAT, CRISPR, RT-LAMP மற்றும் Rapid Molecular Testing Systems மூலமாகவும் சோதனையை மேற்கொள்ளலாம்.

ஒமிக்ரான் பிஎப் 7 கண்டுபிடிப்பது எப்படி?

ஒமிக்ரான் பிஎப் 7 மாறுபாட்டை அடையாளம் காண்பதற்கான ஒரே வழி, மாறுபாட்டின் மரபணு சோதனை ஆகும். NIV எனப்படும் தேசிய வைராலஜி மையங்களில் மேற்கொள்ளப்படும் சோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதன் பரம்பரை மற்றும் அதன் மரபணு வரிசை மூலம் தீர்மானிக்கப்படும். 

மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News