Corona Side Effect: 40% நோயாளிகளுக்கு காதுகளில் buzzing ஒலி: UK ஆய்வு

ஏற்கனவே டின்னிடஸுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால், தொற்றுநோய்க்குப் பிறகு அவர்களுக்கு இந்த ஒலி கேட்பது அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பதைக் கண்டறிவதுதான் இந்த ஆராய்ச்சியின் குறிக்கோளாக இருந்தது.

Last Updated : Nov 7, 2020, 12:28 PM IST
  • அமைதியின்மை, தனிமை மற்றும் வழக்கத்திலிருந்து மாறிய வாழ்க்கை ஆகியவை நோயாளிகளின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • தொற்றுநோய் காரணமாக, நோயாளிகளால் மருத்துவரை சந்திக்க முடியவில்லை.
  • இது மக்களில் மன அழுத்தத்தை அதிகரித்தது.
Corona Side Effect: 40% நோயாளிகளுக்கு காதுகளில் buzzing ஒலி: UK ஆய்வு title=

கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல வித பக்க விளைவுகளும் ஏற்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். தற்போது, பாதிக்கப்பட்டவர்களின் காதுகளில் ஒரு வித ஓசை ஒலிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கொரோனா அறிகுறிகள் உள்ள நோயாளிகளில் 40 சதவீதம் பேர் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள். காதில் ஒலிக்கும் ஒலி அறிவியல் மொழியில் டின்னிடஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த கூற்று பிரிட்டனில் ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

48 நாடுகளின் கொரோனா பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது

கொரோனாவின் விளைவைப் புரிந்து கொள்ள, அமெரிக்கா (America) மற்றும் இங்கிலாந்தின் 48 நாடுகளில் 3103 நோயாளிகளைக் கொண்டு இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டது. ஏற்கனவே டின்னிடஸுடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டால், தொற்றுநோய்க்குப் பிறகு அவர்களுக்கு இந்த ஒலி கேட்பது அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பதைக் கண்டறிவதுதான் இந்த ஆராய்ச்சியின் குறிக்கோளாக இருந்தது.

ALSO READ: Shocking: கொரோனா தொற்றால் காது கேளாமல் போகலாம்: லண்டன் ஆய்வு

சில கொரோனா நோயாளிகளுக்கு நோய்த்தொற்றுக்குப் பிறகு குரல் அதிர்வு பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பித்தன என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. அதே நேரத்தில், ஏற்கனவே இந்த சிக்கலுடன் போராடி வருபவர்களுக்கு இது மிகவும் தீவிரமானது.

காதில் குரல் அதிர்வு நீண்ட கோவிட்டின் அறிகுறியாக மாறும்

காதுகளில் எதிரொலிக்கும் டின்னிடஸின் இந்த அறிகுறியும் நீண்ட கோவிட்டின் (COVID) அறிகுறியாக மாறும். ஆனால் இது போல சிலபேருக்குதான் ஏற்பட வாய்ப்புள்ளது. தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கத் துவங்கிய பின்னர் டின்னிடஸ் பிரச்சினை மிகவும் கடுமையானதாகிவிட்டது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நம்புகின்றனர்.

வாழ்க்கை முறையின் மாற்றங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின

தொற்றுநோய்களின் போது ஏற்பட்ட அமைதியின்மை, தனிமை மற்றும் வழக்கத்திலிருந்து மாறிய வாழ்க்கை ஆகியவை நோயாளிகளின் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டிஷ் நோயாளிகளில் 46 சதவீதம் பேர் நம்புகின்றனர். 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தொற்றுநோயின் போது டின்னிடஸ் கணிசமான மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.

ஆராய்ச்சியின் படி, ஏற்கனவே டின்னிடஸுடன் போராடிக் கொண்டிருந்தவர்களிடையே தொற்றுநோய்களின் போது இந்த சிக்கல் மிகவும் கடுமையானது. தொற்றுநோய் காரணமாக, நோயாளிகளால் மருத்துவரை சந்திக்க முடியவில்லை. இது நிலைமையை மோசமாக்கியது. இது மக்களில் மன அழுத்தத்தை அதிகரித்தது.

ALSO READ: Alert: Corona Virus உடலை விட்டு சென்றாலும், அதன் பக்க விளைவுகள் நமக்கு ஆபத்தாக இருக்கலாம்…

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News