பூசணிக்காய் கொண்டு பொரியல், சூப் மற்றும் இனிப்பு வகைகளையும் செய்யலாம். இவ்வளவு ருசியான உணவுகளை தரும் இந்த பூசணிக்காயில் பல சத்துக்களும் நிறைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் இதில் வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சத்துக்களின் பல கூறுகள் காணப்படுகின்றன. நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பூசணிக்காய் நமது எடை இழப்பில் பெரிதாக உதவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அதேபோல் கோடை காலத்தில் இதை உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனவே பூசணிக்காயை உட்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்துக்கொள்வோம்.
பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்-
நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும்
பூசணிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதே சமயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் பூசணிக்காயை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் பல நோய்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது. அதனால்தான் பூசணிக்காயை தினமும் உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | கல்லீரல் பிரச்சனை அண்டாமல் இருக்க... தினசரி டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்!
எடை குறைக்க உதவும்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். அதே சமயம், இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க உதவுகிறது.
இதய நோய்கள் நீங்கும்
பூசணிக்காயை உட்கொள்வது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே சமயம் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலை உடலில் கட்டுக்குள் வைத்திருக்கும். மறுபுறம், நீங்கள் தினமும் பூசணிக்காயை உட்கொண்டால், மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம்.
உடல் நீரேற்றத்துடன் இருக்கும்
கோடை காலத்தில் பெரும்பாலானோரின் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், பூசணிக்காயை உட்கொள்வது நீரிழப்பு பிரச்சனையைத் தவிர்க்க நன்மை பயக்கும். ஏனெனில் இதில் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொற்று நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும் கிராம்பு! அற்புத மருத்துவ பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ