Migraine: ஒற்றைத் தலைவலிக்கு ‘குட் பை’ சொல்ல உதவும் சில யோகாசனங்கள்!

Yogasanas for Migraine Painநமது அன்றாட வாழ்க்கையையே பாதிக்கும் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிரந்திரமாக விடுபட சில யோகாசனங்கள் மிகவும் பயன் அளிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 22, 2022, 11:54 AM IST
  • ஒற்றைத் தலைவலி பல சமயங்களில் முற்றிலும் தாங்க முடியாததாக உள்ளது.
  • சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அதன் மோசமான பாதிப்புகள், உங்கள் மனதை நாளுக்கு நாள் பலவீனப்படுத்தும்.
  • சிந்திக்கும் திறனும் பலவீனமடையத் தொடங்குகிறது.
Migraine: ஒற்றைத் தலைவலிக்கு ‘குட் பை’ சொல்ல உதவும் சில யோகாசனங்கள்! title=

இன்றைய வாழ்க்கை முறை காரணமாவும், உணவு பழக்கம் காரணமாகவும், ஒற்றைத் தலைவலி நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒற்றைத் தலைவலி என்பது சில சமயங்களில் ஒரு பக்கமாகவும், சில சமயங்களில் தலை பகுதி முழுவதிலும், அல்லது தலையின் பின் பகுதி என பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சமயங்களில் முற்றிலும் தாங்க முடியாததாக உள்ளது. அதே நேரத்தில், ஒற்றைத் தலைவலி மற்ற நோய்களையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அதன் மோசமான பாதிப்புகள், உங்கள் மனதை நாளுக்கு நாள் பலவீனப்படுத்தத் தொடங்குகிறது. உங்கள் நினைவாற்றலுடன், உங்கள் சிந்திக்கும் திறனும் பலவீனமடையத் தொடங்குகிறது.

தினமும் தலைவலி வந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். அதோடு, வீட்டிலேயே தினமும் இந்த ஆசனங்களைச் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஒற்றைத் தலைவலியை பெரிதும் குறைக்கலாம். மேலும், ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிலிருந்து நிரந்திர நிவாரணம் பெறலாம்.

சேது பந்தாசனம்

சேது பந்தாசனம் செய்ய, தரையில் படுத்து, இரண்டு கால்களுக்கும் பின்னால் கைகளை வைக்கவும், அதன் பிறகு மெதுவாக உங்கள் இடுப்பை தரையில் மேலே உயர்த்தவும், இந்த நிலையில் உங்கள் மேல் உடல், தலை, கைகள் மற்றும் கால்கள் மட்டுமே தரையைத் தொடும். சுமார் 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும். இதனாஇ தினமும் 2 முறை செய்யவும். பின்னர் படிப்படியாக அதிகரித்து 6-8 முறை வரை செய்யவும். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. 

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

பாலாசனம்

இந்த ஆசனத்தில், தரையில் உட்கார்ந்து கொண்டு கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். உங்கள் கைகள் முடிந்தவரை தளர்வாக இருக்க வேண்டும்.  இந்த ஆசனம் மூலம் நீங்கள் நிம்மதியாக உணர முடியும். இதை சுமார் 3 முறை செய்யவும். இது உங்களது டென்ஷனை போக்கி மன அமைதியை தரும். 

ஹஸ்தபாதாசனம்

இந்த ஆசனத்தைச் செய்ய, நேராக நிற்கவும், இப்போது மெதுவாக முன்னோக்கி குனியவும். இந்த நிலையில், உடலை பாதியாக மடக்கி, இரண்டு கைகளையும் தரையில் கால்களுக்கு அருகில் கொண்டு வர வேண்டும். அதாவது விரிப்பில் நேராக நின்றுக் கொண்டு இரண்டு கைகளையும் மேலே தூக்க வேண்டும். பின் கைகளை அப்படியே கீழே நோக்கி வந்து, கால்களை ஒட்டி தரையில் பதிக்க வேண்டும். இந்த யோகாசனம் செய்யும் போது, ​​உங்கள் முகம் உங்கள் பாதங்களை நோக்கி இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் இந்த யோகாவை 3 முறை செய்ய வேண்டும். இது சிறிது கடினமான ஆசனம் என்றாலும் உடல் முழுவதும் நல்ல மாற்றத்தினை உருவாக்க கூடியது ஆகும்.

மேலே குறிப்பிட்டுள்ள ஆசனங்களை  செய்து வரை மைக்ரைன் என்னும் கடுமையான தலைவலி பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News