மிகவும் வேகமாக பரவக்கூடிய வைரஸ் நோய்களின் ஒன்றான தட்டம்மை தற்போது உலகம் முழுவதும் அதிக அளவில் பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து தட்டம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது என்றும், கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 40 மில்லியன் குழந்தைகள் தட்டமைக்கான தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்றும் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையில், தடுப்பூசி மூலம் முற்றிலும் தடுக்கக்கூடிய தட்டம்மை நோய், விலங்குகள் மூலம் பரவாது. இருப்பினும், சமூகப் பரவலைத் தடுக்க தடுப்பூசி பாதுகாப்பு மிகவும் அவசியமானது
95 சதவீதத்திற்கும் அதிகமான தட்டம்மை இறப்புகள் வளரும் நாடுகளில்தான் நிகழ்கின்றன. தட்டம்மை இளம் குழந்தைகளின் மரணத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. Paramyxovirus வகை வைரஸ்களால் உருவாகும் தட்டம்மை நோய், இருமல் மற்றும் தும்மல் மூலமாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வேகமாக பரவக்கூடியது.
காய்ச்சல் இருக்கும்போது, தோலில் சிகப்பு தடிப்புகள், இருமல், சளி மற்றும் கண் சிகப்பாதல் போன்ற அறிகுறிகள் மூலம் கண்டறியலாம். போதிய நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு இந்த நோய்த் தாக்கம் எளிதில் ஏற்படும்.
மேலும் படிக்க | உடல் எடையை குறைத்து நீரிழிவு நோயை விரட்டும் ‘ஆப்பிள் டீ’! தயாரிப்பது எப்படி!
அதேபோல, ரூபெல்லா என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும், ஜெர்மன் தட்டம்மை அல்லது மூன்று நாள் தட்டம்மை என்றும் அழைக்கப்படும் இந்தத் தொற்று பெரும்பாலான மக்களுக்கு லேசான அல்லது அறிகுறிகளை காட்டினாலும், பலருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் இருப்பதில்லை.
ஆனால், கர்ப்பிணி பெண்களுக்கு ரூபெல்லா பாதித்தால், அது கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ருபெல்லா நோய் தொற்று ஏற்பட்ட பெண்களுக்கு, கருச்சிதைவு, சிசு மரணம் மற்றும் கருவில் உள்ள குறைந்தைக்கு குறைபாடு மற்றும் பிறக்கும் குழந்தை ருபெல்லா நோயுடன் பிறக்கும் ஆபத்தையும் ஏற்படுத்தும்.
Congenital Rubella Syndrome என்பது பல்தரப்பட்ட குறைபாடுகளை உருவாக்கும். குறிப்பாக கண், காது, மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதோடு இதய குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என்பதால், இந்த தொற்று மிகவும் கவலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
மேலும் படிக்க | சும்மா சும்மா தும்மல் வருதா, இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணுங்க
தட்டம்மை தடுப்பூசியால் 2000 முதல் 2015 வரை உலக அளவில் 79% இறப்புகள் குறைந்துள்ளன என்று கூறப்படுகிறது. இருந்தாலும், 2015ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதிலும் ஏறக்குறைய 1,34,200 இறப்புகள் தட்டம்மையால் நிகழ்ந்துள்ளன என்பது தட்டம்மை நோயின் தீவிரத்தை உணர்த்த போதுமானது. 2015-ல் இந்தியாவில் 49,200 குழந்தைகள் தட்டம்மை நோயால் இறந்துள்ள்னர்.
ருபெல்லா தடுப்பூசி அறிமுகம் செய்யப்படாத நாடுகளில் பிறவியிலேயே ருபெல்லா பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் இழப்பு அதிக அளவில் உள்ளது. தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய நோய் என்றாலும், நோய்த்தாக்கம் ஏற்பட்ட பின் அதனை குணப்படுத்த, போதுமான சிகிச்சைகள் இல்லை.
2010ல் மட்டும் 1 லட்சத்து மூவாயிரம் குழந்தைகள் பிறவியிலேயே ருபெல்லா பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய தொற்றுடன் பிறந்துள்ளனர் என்றும் அதில் 46% சதவிகித குழந்தைகள் தென் கிழக்கு ஆசியாவில் உள்ளனர் என்று ஒரு மதிப்பீடு குறிப்பிடுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ