நரை முடிக்கு இயற்கை வைத்தியம்: முடி நரைப்பது என்பது பலர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாகும். முடி நரைப்பதற்கு மரபியல் முதல் ரசாயனப் பொருட்களின் பயன்பாடு வரை பல காரணங்கள் உள்ளன. முடி வெண்மையாக மாறும்போது, அதை கருமையாக்க வெவ்வேறு முறைகள் முயற்சிக்கப்படுகின்றன. வீட்டு வைத்தியம் பற்றி பேசுகையில், முடியை கருப்பாக்க உதவும் பல விஷயங்கள் சமையலறையில் உள்ளன. அந்தவகையில் நமது சமையலறையில் கருஞ்சீரகமும் பயன்படுத்திதான் வருகிறோம். இதிலிருந்து வெள்ளை முடிக்கு அற்புதமான ஹேர் டையை உருவாக்கலாம். இந்த செய்முறையை முயற்சி செய்வதும் எளிதானது. எனவே வீட்டிலேயே கருஞ்சீரகத்தைக் கொண்டு ஹேர் டை செய்து நரை முடியை மீண்டும் கருப்பாக்குவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
நரை முடிக்கு கருஞ்சீரகத்தின் ஹேர் டை | Kalonji Hair Dye For White Hair
கருஞ்சீரகத்தில் இருந்து ஹேர் டை செய்ய, முதலில் ஒரு கடாயை தீயில் வைக்கவும். இந்த கடாயில் கருஞ்சீரக விதைகளை போட்டு வறுக்கவும். இந்த விதைகளை வறுத்த பின் அதனுடன் நெய் சேர்த்து லேசாக கிளறி விடவும். கருஞ்சீரகம் வெந்ததும் மருதாணி, காபித் தூள், வேப்பிலைத் தூள், நெல்லிக்காய் தூள் சேர்த்துக் கலந்து அரை கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். இந்த கலவையை சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்ட பிறகு, கேஸை அணைத்து, குளிர்விக்க வைக்கவும். இப்போது இந்த ஹேர் டையை கூந்தலில் தடவலாம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயால் ஏற்படும் நரம்பியல் பிரச்சனைகளை தீர்க்க வழி
கருஞ்சீரகத்தால் செய்யப்பட்ட இந்த ஹேர் டையை கூந்தலில் தடவ, முதலில் இந்த ஹேர் பேக்கை வேர் முதல் நுனி வரை பிரஷ் மூலம் தடவவும். இதற்குப் பிறகு, இந்த ஹேர் டையை தலைமுடியில் கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலசவும். நரை முடியில் கருமை தெரிய ஆரம்பிக்கும். இந்த ஹேர் டையை மாதம் ஒருமுறை முதல் இரண்டு முறை தடவலாம். இந்த ஹேர் மாஸ்க் முடியில் பல வழிகளில் நன்மைத் தரும்.
அவுரி இலையும் பயன்படுத்தலாம்
அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். முதலில் அவுரி இலை, மருதாணிபொடியுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும். மருதாணி இலையையும் மற்றும் அவுரி இலையையும் தனித்தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதை இரவே பேஸ்ட் செய்து ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இந்த பேஸ்ட்டை நன்றாக தலைமுடியில் தேய்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு தலைமுடியை ஷாம்பை கொண்டு நன்றாக அலசிவிட்டு முடியை நன்றாக உலர்த்தவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கருவளையம் மற்றும் மங்கு சரும அழகைக் கெடுக்கிறதா? முகப் பொலிவை மேம்படுத்த டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ