Low Sperm Count: விந்தணு குறைப்பாட்டுக்கான அறிகுறி

விந்தணுக்கள் குறைபாட்டுக்கான அறிகுறிகளை ஆண்கள் புறந்தள்ளக் கூடாது. இது குழந்தையின்மைக்கு வழிவகுக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 27, 2022, 10:08 AM IST
  • குறைந்த விந்தணுக்கள் காரணம்
  • ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
  • உடனடி சிகிச்சை மூலம் தீர்வு காணலாம்
Low Sperm Count: விந்தணு குறைப்பாட்டுக்கான அறிகுறி title=

இன்றைய காலக்கட்டத்தில் தவறான வாழ்க்கை முறை மற்றும் பிற காரணங்களால் ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கை குறைகிறது. ஆண்களில் குறைந்த விந்தணு எண்ணிக்கை ஒலிகோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. விந்தணுக்கள் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தால், அது அஸோஸ்பெர்மியா என்று அழைக்கப்படுகிறது. விந்தணுவில் ஒரு மில்லிலிட்டருக்கு 15 மில்லியனுக்கும் குறைவான விந்தணுக்கள் இருந்தால், உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கை இயல்பை விட குறைவாகவே கருதப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

மேலும் படிக்க | Liver Health: கல்லீரல் பாதிப்பின் 4 முக்கிய அறிகுறிகள்

விந்தணு குறைப்பாட்டுக்கான காரணம்

வாழ்க்கை முறை மாற்றமே விந்தணு குறைப்பாட்டுக்கான முக்கிய காரணங்கள் ஆகும். வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட்டு நிதானமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும். ஆனால், அதனை யாரும் செய்வதில்லை. வேகமான ஓட்டம் காரணமாக மனஅழுத்தம், மனச்சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது நேரடியாக விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது. இவை தவிர சில தவறான பழக்க வழக்கங்களும் காரணம். மது பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட சில காரணங்களும் உள்ளன. 

குறைந்த விந்தணு அறிகுறிகள்

கணவன் - மனைவி கருத்தரிப்பதில் சிரமம் இருந்தாலே விந்தணு குறைப்பாடு சோதனை மேற்கொள்வது அவசியம். இதுதவிர வெளிப்படையாக வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது. ஹார்மோன்கள் மாற்றம்கூட விந்தணுக்களின் எண்ணிக்கை உற்பத்தியை பாதிக்கும். பாலியல் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள், பாலியல் ஆசை குறைதல் போன்றவையும் விந்தணு குறைபாட்டுக்கான காரணங்கள். விந்தணுக்களில் வலி, வீக்கம் மற்றும் கட்டிகள், முடி கொட்டுதல், குரோமோசோம்கள் அல்லது ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு ஆகியவை இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு இருக்கும். 

மேலும் படிக்க | ஜிம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை: வேகவைத்த முட்டையை அதிகமா சாப்பிட்டால் ஆபத்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News