உலகின் பெரும்பாலான பகுதிகளில் அருந்தப்படும் சூடான பானங்களில் ஒன்று டீ ஆகும். இந்த டீ பல வகைகளில் கிடைக்கிறது. க்ரீன் டீ, பிளாக் டீ மற்றும் லெமன் டீ போன்ற வகைகள் உள்ளது. இதில் லெமன் டீ அதிக புத்துணர்ச்சியை அளிக்க கூடியதாகும். எனவே லெமன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
* செரிமானம்: செரிமானமாவதற்கு லெமன் (Lemon) டீ பெரிதும் உதவுகிறது. நம் உடலுக்கு ஒவ்வாத கண்டகண்ட உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தாலும், லெமன் டீ (Lemon Tea) அவற்றைக் கரைத்து, உடல் செரிமானத்தை வலுவாக்குகிறது.
ALSO READ | காலையில் எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
* மெட்டபாலிசம்: லெமன் டீயைக் குடிப்பதால் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, குளிர் காலத்தில் லெமன் டீ குடிப்பது சுறுசுறுப்பிற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
* எடையை குறைக்க உதவும்: லெமன் டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றி வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: எலுமிச்சையில் வைட்டமின் சி (Vitamins), வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் மாதிரியாக சத்துகள் அதிகம். இவை அனைத்தும் ஒவ்வாமை, தொற்று இவற்றில் இருந்து காக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை நமக்கு அதிகமாக கொடுக்கின்றன. அதேபோல தேயிலை தூளும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதாக உள்ளது.
* மன அழுத்தத்தை குறைக்கும்: லெமன் டீயில் பொட்டாசியம், மெக்னீசியம், சிங்க், காப்பர் போன்ற பல சத்துகள் கலந்து கிடைப்பதால் நமது மூளையை சுறுசுறுப்பாக்கிறது. எனவே லெமன் டீயைக் குடித்தால் நம் மனநிலையே புத்துணர்ச்சியாக மாறுவதும், மன அழுத்தம் நீங்கி ஒரு வித அமைதியை உணர்கிறோம்.
லெமன் டீ (இரண்டு பேருக்கு) எவ்வாறு தயாரிப்பது
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அரை டீஸ்பூன் அளவிற்கு டீ தூள் போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீர் நன்கு கொதித்து வரும் சமயத்தில் உங்களிடம் கருப்பட்டி, நாட்டு சர்க்கரை போன்றவை இருந்தால் அதனை சேர்த்து கரைய விடுங்கள். அதன் பிறகு இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி பருகவும்.
ALSO READ | கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும் உணவு வகைகள் இதோ: தொற்றும் தொல்லையும் ஓடிப் போகும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR