கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தை மத்திய அரசு பரிந்துள்ளது!!
கொரோனா வைரஸ் தோற்றுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மருந்தை பயன்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த கொரோனாவுக்கு தேசிய பணிக்குழு கொரோனா மூலம் அதிக ஆபத்துள்ள நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்த பயன்படுத்த பரிந்துரைக்கிறது.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களைன் எண்ணிக்கை 415-யை நெருக்கியுள்ளது. இதுவரை உயிரிலந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தோற்றுக்கு உரிய மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்ற மருந்தைப் பயன்படுத்தலாம் என மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகச் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் சிறப்புக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மருந்து ஏற்கெனவே மலேரியாவுக்கு வழங்கப்பட்டு வருகிறதாம். ஏற்கெனவே, மருத்துவ பயன்பாட்டில் உள்ள இம்மருந்தை கொரோனா பாதித்த நோயாளிக்கும் வழங்கலாம் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக இந்த மருந்தினை கொரோனாவுக்கான மருந்தாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மேலும், ஜோர்டான் நாடும் இதனைப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரை செய்திருந்ததாம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அமைத்த குழு, இதனைத் தேசிய அவசரக்கால மருந்தாக மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், குறிப்பிட்ட மருத்துவரின் அறிவுரையில்லாமல் இந்த மருந்தைப் பயன்படுத்தக்கூடாது என்றும் அதில் குறிப்பிடபட்டுள்ளது.