உடல் எடையை குறைக்கும் டிப்ஸ்: தற்போது உடல் எடை அதிகரிப்பதால் மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எடையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவில்லை என்றால், அது பல கடுமையான நோய்களுக்கு காரணமாகிவிடும். உடல் பருமனை குறைக்க, உடற்பயிற்சி, எடை குறைப்பு உணவு முறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது. உடல் எடையைக் குறைக்க பலர் சாப்பிடுவதையும் குடிப்பதையும் கூட நிறுத்துகிறார்கள். இருப்பினும், இதன் காரணமாக உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், இதற்காக உங்கள் உணவில் சரியான மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், எடை இழப்புக்கு நீங்கள் இரவு உணவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. ஜவ்வரிசி உப்புமா
தேவையான பொருட்கள்: 1 கப் ஜவ்வரிசி, 1/2 கப் வேர்க்கடலை, 2 டீஸ்பூன் நெய், 1 டீஸ்பூன் சீரகம், 3 முதல் 4 முழு காய்ந்த மிளகாய், 4-5 கறிவேப்பிலை, 1 தேக்கரண்டி கல் உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கொத்தமல்லி இலைகள், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.
செய்முறை: முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவவும். பின்னர் இதை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இப்போது அதை தண்ணீரிலிருந்து வடிகட்டவும். இப்போது வறுத்த வேர்க்கடலை, உப்பு மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை ஜவ்வரிசியுடன் சேர்க்கவும். ஒரு கடாயை எடுத்து அதில் நெய்யை சூடாக்கவும். இப்போது சீரகம், முழு காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். சிவப்பு மிளகாய் கருப்பாக மாற ஆரம்பித்ததும் அதனுடன் ஜவ்வரிசி சேர்த்து குறைந்த தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது கேஸை அணைக்கவும்.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை கரைக்கணுமா... இந்த காய்கறிகளை எக்கசக்கமா சாப்பிடுங்க!
2. சீமை சுரைக்காய் பாஸ்தா
தேவையான பொருட்கள்: 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய், 2-3 சீமை சுரைக்காய், 2 பச்சை மிளகாய், 3 முதல் 4 பூண்டு, 2 தண்டுகள் பச்சை வெங்காயம், 100 கிராம் ஸ்பாகெட்டி, 6 முதல் 8 செர்ரி தக்காளி, உப்பு மற்றும் மிளகு சுவைக்கு ஏற்ப.
செய்முறை: ஒரு கடாயை எடுத்து, அது சூடானதும் எண்ணெய் மற்றும் சுரைக்காய் சேர்க்கவும். அடுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகுத்தூள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். இப்போது ஸ்பாகெட்டியை கொதிக்கும் உப்பு நீரில் சமைக்கவும். வெந்ததும் சீமை சுரைக்காய் கலவையில் சேர்க்கவும். சிறிதளவு கிளறி இறக்கி, தயாரானதும் பரிமாறவும்.
3. ஓட்ஸ் இட்லி
தேவையான பொருட்கள்: 1/2 கப் ஓட்ஸ், 1 டீஸ்பூன் குக்கிங் சோடா, ருசிக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் பெருங்காயம், 2 டீஸ்பூன் கடுகு, அரை கப் ரவை, அரை கப் பட்டாணி, 1 கைப்பிடி கொத்தமல்லி இலை, 1 டீஸ்பூன் தயிர், 1- 2 கேரட், அரை கப் மோர்
செய்முறை: அனைத்து காய்கறிகளையும் கழுவி நறுக்கவும். இப்போது ஓட்ஸை உலர்ந்த வறுக்கவும். ஆறவைத்து பொடியாக அரைக்கவும். அடுத்து, ரவையை வறுத்து, ஆறவிட்டு, வறுத்த ஓட்ஸுடன் கலக்கவும்.
இப்போது ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். சில நொடிகள் கழித்து நறுக்கிய காய்கறிகள், பட்டாணி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடம் வதக்கவும். அதனுடன் ஓட்ஸ் கலவையை சேர்க்கவும், அதன் பிறகு உப்பு, பெருங்காயம், கொத்தமல்லி, குக்கிங் சோடா, தயிர் மற்றும் மோர் சேர்க்கவும். இந்த பொருட்களை நன்கு கலந்து, மூடி வைத்து சில நிமிடங்கள் விடவும். இட்லி தட்டுகளில் மாவை ஊற்றி சூடாக பரிமாறவும்.
4. முட்டை சாட்
தேவையான பொருட்கள்: 3 வேகவைத்த முட்டை, 1 டீஸ்பூன் தக்காளி சில்லி சாஸ், 3 டீஸ்பூன் புளி சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் வறுத்த சீரக தூள், சுவைக்கு ஏற்ப உப்பு, 1 பச்சை மிளகாய், 1 நறுக்கிய சின்ன வெங்காயம்
செய்முறை: ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தக்காளி சில்லி சாஸ், புளி சாறு, எலுமிச்சை சாறு, வறுத்த சீரக தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்க்கவும். வேகவைத்த முட்டைகளை இரண்டு பகுதிகளாக வெட்டி அதன் மேல் சட்னியை பரப்பவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் கரம் மசாலாவை தூவி, இரவு உணவிற்கு பரிமாறவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்: டயட் பிளான் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ