புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சனிக்கிழமையன்று கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய கோவிட் -19 தடுப்பூசிகளை கலப்பது தொடர்ப்பான ஆய்வின் மூலம், இந்த இரு வகை தடுப்பூசிகளையும் கலந்து போடும் போது, நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கிறது என்பதோடு, மிகவும் பாதுகாப்பானது எனவும் தெர்யவந்துள்ளது.
இந்தியாவில், பாரத் பயோடெக்கின் (Bharat Biotech) கோவாக்ஸின் (Covaxin) மற்றும் ஆக்ஸ்போர்டு- சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் (Covishield) ஆகியவை அவசர பயன்பாட்டிற்காக ஒப்புதலைப் பெற்ற முதல் இரண்டு கோவிட் -19 தடுப்பூசிகளாகும். அவை நாட்டில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
Study on mixing & matching of COVID vaccines, Covaxin&Covishield shows better result: ICMR
Immunization with combination of an adenovirus vector platform-based vaccine followed by inactivated whole virus vaccine was not only safe but also elicited better immunogenicity: Study pic.twitter.com/wDVZ6Q2TvU
— ANI (@ANI) August 8, 2021
இது தவிர ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தவிர ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனம் இந்தியாவில் ஒற்றை டோஸ் கோவிட் தடுப்பூசியின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Also Read | Covid Updates: ஆகஸ்ட் 7 தமிழகத்தில் இன்று 1,969 பேருக்கு கொரோனா பாதிப்பு; 29 பேர் பலி
இந்தியாவில் நிர்வகிக்கப்படும் ஒட்டுமொத்த கோவிட் -19 தடுப்பூசி அளவுகள் 50.62 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இரவு 7 மணி தற்காலிக அறிக்கையின்படி, சனிக்கிழமை 50 லட்சத்திற்கும் அதிகமான டோஸ் வழங்கப்பட்டது. 18-44 வயதுடையர்கள் பிரிவில், சனிக்கிழமையன்று, 27,55,447 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 5,08,616 இரண்டாவது டோஸும் வழங்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read | Covovax இந்தியாவில் அக்டோபர் மாதம் அறிமுகமாகிறதா; SII கூறியது என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR