மூட்டு வலிகள் மற்றும் அசௌகரியம் ஏற்பட்டாலே உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற வலிகள் பல நோய்களுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கலாம் என்பதால், முதலில் உங்கள் வலிக்கான காரணம் என்ன என்பதைக் கண்டறியவும். ஆனால் அது ஹைப்பர்யூரிசிமியா என்று கண்டறியப்பட்டால், கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால் நமது இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான யூரியா செல்வது உடலை சீர்குலைக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
உடலில் உருவாகும் அதிக அளவு யூரிக் அமிலம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. இந்த அதிகப்படியான யூரியா உங்கள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடலின் திசுக்களில் தங்கிவிடும். உடலில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருந்தால், அது சிறுநீரகங்களின் செயலிழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் இதற்கு கவனம் அவசியம்.
ஹைப்பர்யூரிசிமியாவால் பாதிக்கப்பட்டிருந்தால், மூட்டுகளில் வலி, காய்ச்சல், குளிர் மற்றும் சிறுநீரக நோய்களின் என பல அறிகுறிகள் ஏற்படும். யூரிக் அமிலத்தின் அளவு நமது உடலில் அதிகரிக்க என்ன காரணங்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைக்க சிறப்பான வழி! 3 மாதங்களுக்கு நோ அசைவம்! ஒன்லி சைவம்
போதுமான அளவு சிறுநீர் கழிக்காமல் இருப்பது
உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பது என்பது, யூரிக் அமிலம் வெளியேற்றம் குறைவதன் காரணமாகவும் இருக்கலாம். யூரிக் அமிலத்தின் வெளியேற்றம் குறைவதற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், நாள்பட்ட சிறுநீரக நோய், நாளமில்லா சுரப்பி அல்லது அமிலத்தன்மை போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் காரணமாக இருக்கலாம்.
தீங்கு விளைவிக்கும் உணவுகள்
அதிக பியூரின் செறிவு கொண்ட உணவுகளாலும் யூரிக் அமில அளவு அதிகரிப்பு ஏற்படலாம். கல்லீரல் மற்றும் சிறுநீரக இறைச்சி, சிவப்பு இறைச்சி, மீன், கோழி, மத்தி, காளான்கள், நெத்திலி, ஈஸ்ட் போன்ற உணவுகள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன.
விரதம் மற்றும் பட்டினியாக இருப்பது
சரியாக நேரா நேரத்திற்கு உண்பது தான் ஆரோக்கியம், பட்டினி கிடப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, உடலில் யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்க, சாப்பிடாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். வயிறு காலியாக இருக்கும்போது, நமது உடல் தானாகவே உயிர்வாழ்வதற்காக திரவங்கள் மற்றும் கொழுப்பை உடலில் இருந்து கிரகித்துக் கொள்ளும். சாப்பிடாமல் இருக்கும்போது, ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக நமது உடல், திசுக்களை உடைக்கிறது.இது உங்கள் உடலில் அமிலத்தை உருவாக்க வழிவகுக்கிறது.
மேலும் படிக்க | ரத்த சுத்திகரிப்புக்கு உதவும் முட்டைகோஸ்! அருமைபெருமை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Lesch-Nyhan நோய்
மரபணுக்களின் குறைபாடு காரணமாக ஏற்படும் இந்த நோய், ஹைபோக்சாந்தைன் பாஸ்போரிபோசில்ட்ரான்ஸ்ஃபெரேஸ் 1 அல்லது HPRT1 எனப்படும் நொதியின் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. இந்த நொதி உடலில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குப் பொறுப்பாகும், அது இல்லாத நிலையில் உங்கள் உடல் அதிக அளவு அமிலத்தை உற்பத்தி செய்கிறது.
யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்க காரணங்கள்
யூரிக் அமில அளவு அதிகரிக்க, மன அழுத்தம், கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் விரைவான எடை இழப்பு ஆகியவையும் அடங்கும். நாம் உண்ணும் உணவில் இருந்து, செய்யும் செயல்கள் என அனைத்துமே நீண்ட கால அடிப்படையில் நமது வாழ்க்கையை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | எப்போது எப்படி அக்ரூட் சாப்பிட்டால் யூரிக் அமில பிரச்சனை தீரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ