Premature Balding : நகம், தலை முடி இவை இரண்டுமே கொட்ட கொட்ட வளரும் என்று கூறுவர். ஆனால், சமீப சில நாட்களாக இக்கூற்று பொய்க்கூற்றாகி வருகிறது. காரணம், தலையிலிருந்து முடி கொட்டுகிறதே தவிர, எவ்வளவு முயற்சித்தும் வளரவே மாட்டேங்கிறது என பாலின பாகுபாடின்றி ஆண்களும் பெண்களும் புலம்புகின்றனர். அதிலும், ஒரு சில ஆண்மகன்க்களுக்கு 20 வயதுகளிலேயே முடி அதிகமாக கொட்ட ஆரம்பித்து விடுகிறது.
இளம் வயதில் முடிக்கொட்டுவது..
நமக்கு முடிக்கொட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பள்ளி பருவத்தில் அடர்த்தியாக இருந்த முடி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் போது எப்படியென்றே தெரியாமல் மெல்லியதாகிவிடும். தற்போதைய காலத்தில், பெரும்பாலான ஆண்கள் சந்தித்து வரும் பிரச்சனை இளம் வயதில் சொட்டை விழுவதுதான். இது குறித்து கூறும் மருத்துவர்கள், முடி கொட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என கூறுகின்றனர். தலைகுளிக்க நாம் பயன்படுத்தும் தண்ணீர், காற்று மாசு, முடி பராமறிப்பின்மை, உணவு பழக்கங்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பல இதற்கு காரணமாக இருக்கும். மரபு வழி பிரச்சனையும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.
மேலும் படிக்க | முடி உதிர்வை அடியோட நிறுத்தணுமா? இந்த 4 ஹேர் மாஸ்க்குகள் போதும்
ஒரு நாளைக்கு எவ்வளவு முடி கொட்டலாம்?
ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடி கொட்டுவத்ஹு இயல்பானது என கூறுகின்றனர் மருத்துவர்கள். ஆனால், அதை விட அதிகமாக முடிக்கொட்டினால் முடி இழப்பு அபாயம் ஏற்படலாம். இது குறித்து பேசும் மருத்துவர்கள், நாம் சாப்பிடும் உணவில் ஏதேனும் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றாலோ, எடுத்துக்கொள்ளும் புரதத்தில் பிரச்சனை இருந்தாலோ இது போன்ற பிரச்சனை ஏற்படுமாம். ஆனால், இது சில நாட்களுக்குள்ளேயே சரியாகிவிடும் பிரச்சனை என்றும், இதை விட அதிகமாக கொட்டினால் மருத்துவரை அணுகவது கட்டாயம் என்றும் கூறுகின்றனர்.
முடி கொட்டுவதை தவிர்ப்பது எப்படி?
சொட்டை விழுவதில் பிற காரணங்களுக்கு பங்கு இருந்தாலும், மரபு நோய்கள் பெரும் பங்கு வகிக்கின்றனவாம். எனவே, நம் வாழ்வில் தினசரி சில மாற்றங்களை ஏற்படுத்தினால் ஒழிய அதிகமாக முடிக்கொட்டுவதில் இருந்து தப்பிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
சரியான தூக்கம்:
>முடி கொட்டாமல் இருக்க மன அழுத்தத்தை தவிர்ப்பது முக்கியம். எனவே, 7 முதல் 8 மணி நேரம் வரை தூங்கலாம்.
>தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்
>தினமும் புரதம் நிறைந்த உணவை சாப்பிட வேண்டும்
>முடி பராமறிப்பு முக்கியம்-ஷாம்பூ மற்றும் எண்ணெயை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? இதை மட்டும் பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ