மருத்துவத்தின் மந்திர மருந்தாக இருந்தாலும் மஞ்சளுக்கும் கெட்ட குணம் இருக்கு! எப்போது ‘நோ’ சொல்லனும்?

Turmeric Alert: மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற  அம்சம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, தொற்றுநோயைத் தடுக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, வலி நிவாரணியாக செயல்படுகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 17, 2024, 09:57 AM IST
  • மஞ்சளில் உள்ள குர்குமின் அற்புதமானது
  • இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் மஞ்சள்
  • வலி நிவாரணி மஞ்சள்
மருத்துவத்தின் மந்திர மருந்தாக இருந்தாலும் மஞ்சளுக்கும் கெட்ட குணம் இருக்கு! எப்போது ‘நோ’ சொல்லனும்? title=

மஞ்சள் இந்திய சமையலறையில் ஒரு முக்கிய மசாலா மட்டுமல்ல, ஆயுர்வேதத்திலும் இது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  ஒரு சிட்டிகை மஞ்சள் காய்கறிகளின் நிறத்தை மேம்படுத்துவது முதல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை அனைத்தையும் செய்கிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, தொற்றுநோயைத் தடுக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது, வலி நிவாரணியாக செயல்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின், புற்றுநோய் மற்றும் யுடிஐ போன்ற நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. குர்குமினின் செயல்பாட்டால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 

இப்படி மஞ்சளைப் பற்றிய பல நன்மைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஆனால் ஆரோக்கியமாக இருக்க பயன்படுத்தும் மஞ்சளை அதிகமாகப் உபயோகப்படுத்தினால், நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும்.

எவ்வளவு மஞ்சள் போதுமானது?
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, மஞ்சளை அதன் எந்த வடிவத்திலும் அதிகமாக உட்கொள்வது 'விஷம்' போன்றது. இதில் தூய குர்குமின் மற்றும் ஆல்கலாய்டுகள் அதிக அளவில் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலில் நச்சுத்தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெரியவர்களுக்கு தினசரி 5 முதல் 10 கிராம் மஞ்சள் போதுமானது. அளவிற்கு அதிகமாக மஞ்சளை சாப்பிட்டாலும், உடல் அதை நிராகரிக்கிறது, எனவே அதிகமாக சாப்பிடுவதால் எந்த நன்மையும் இல்லை.

மேலும் படிக்க | Disease X என்ன செய்யும்? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலன் தருமா? எதிர்கால தொற்றுநோய்கள்

அதேசமயம் மஞ்சளை பானமாக அருந்துவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்குப் பதிலாக பச்சை மஞ்சளைப் பயன்படுத்தலாம். வெளிர் மஞ்சள் மஞ்சளை விட அடர் மஞ்சள் மஞ்சளில் அதிக குர்குமின் உள்ளடக்கம் உள்ளது. வெளிர் மஞ்சள் நிற மஞ்சளில் 3% குர்குமின் உள்ளது, அடர் நிற மஞ்சளில் 7% குர்குமின் உள்ளது.

மஞ்சள் முன்னெச்சரிக்கை அலர்ட்  
மஞ்சள் உடலின் சூட்டை அதிகரிக்கும். அதாவது அதை சாப்பிடுவது உடலுக்கு வெப்பத்தை அளிக்கிறது. எனவே, இரத்தப்போக்கு நோய்கள் மற்றும் மாதவிடாய் போன்ற சமயங்களிலும், பித்த கோளாறுகள் இருக்கும்போதும், மஞ்சள் பயன்பாடு அளவுடன் இருக்க வேண்டும். அதேபோல, கோடைக் காலத்தில் மஞ்சள் சாறு அல்லது குர்குமின் உட்கொள்வதைக் குறைப்பது நல்லது.

உடல் ஒல்லியாக இருப்பவர்களும், போதுமான அளவு உடல் எடை இல்லாதவர்களும் மஞ்சளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. நீங்கள் மலச்சிக்கலால் சிரமப்பட்டாலும், மஞ்சள் சாறு அல்லது பச்சை மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல சருமம் வறண்டு போனாலும், மஞ்சளை குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும்.

மேலும் படிக்க | யூரிக் அமில சுரப்புக்கும் பால் குடிப்பதற்கும் உள்ள கனெக்‌ஷன்! இது தெரிஞ்சா பிரச்சனை ஓவர்!

மஞ்சளை எப்படி பயன்படுத்தலாம்?

மஞ்சளை அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது ஏன் என்பதை தெரிந்துக் கொண்டாலும், மஞ்சளை எப்படி உட்கொள்வது உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். 

இருமல், எடை இழப்பு, தொற்று மற்றும் வீக்கம் போன்றவற்றைக் குறைக்க மஞ்சளை உட்கொள்ளும்போது அதை நெய் அல்லது முழு கொழுப்புள்ள பசும்பாலில் பயன்படுத்தவும். இது நல்ல பலனைத் தரும். உண்மையில், நெய் மற்றும் பால் இரண்டும் குளிர்ச்சியான இயல்புடையதாகக் கருதப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் படி, சூடான மஞ்சளை, குளிர்ச்சியான இயல்புடைய பொருட்களும் இணைத்துத பாரம்பரிய வழிகளில் உட்கொள்வது பொருத்தமானது. நெய்யுடன் கலந்து மஞ்சளை பயன்படுத்தினால், உடலுக்கு அதிக சூடு ஏற்படும், குளிர்ச்சியால் வரும் நோய்கள் குணமாகும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Tomatoes: தக்காளியை இப்படி சாப்பிட்டா பிரச்சனையே இல்ல.... இரத்த அழுத்தமும் குறையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News